Published:Updated:

விண்ணில் நகரும் விண்கற்களைக் கண்டுபிடித்த அரியலூர் ஆசிரியைகள்; பாராட்டிய நாசா!

அரியலூர் ஆசிரியைகள்
அரியலூர் ஆசிரியைகள்

``கோடிக்கணக்கான விண்கற்கள் பூமியைச் சுற்றி இருக்கின்றன. இந்த வகையான விண்கற்கள் பூமியைத் தாக்கினால் பேரிழப்பை உண்டாக்கும். இது அத்தனையையும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கமுடியாது என்பதற்காகத்தான், எங்களுக்குப் பயிற்சி கொடுத்தாங்க."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நகரும் விண்கற்களைக் கண்டுபிடித்த அரியலூரை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டிச் சான்றிதழ் அனுப்பியுள்ளது. இவர்களின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சான்றிதழ்
சான்றிதழ்
சென்னையில் இன்று பதிவான `நிழலில்லா நாள்': உங்கள் ஊரில் எப்போது தெரியுமா?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து செயல்படும் பெங்களூருவில் உள்ள சிக்குரு கோ-லேப் (Chiguru CoLab), பூமியை நோக்கி வரும் விண்கற்களை இரவு நேரங்களில் படம் எடுத்து அதை அறிவியல் ஆய்வாளர்களுக்கு அனுப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்குரு கோலேபில் பயிற்சி பெற்ற அறிவியல் ஆர்வலர்கள், பூமியை நோக்கி வரும் விண்கற்களை இனம் கண்டு அதன் ஆய்வறிக்கையை அந்நிறுவனத்திற்கு அனுப்புவார்கள்.

அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளைக் கண்டுபிடிப்பதற்கான பயிற்சி பெங்களூருவில் அளிக்கப்பட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியை கிரிஜா, இடையத்தான்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா ஆகிய இருவரும் நகரும் விண்கற்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சி வகுப்பில் கடந்த ஜூலை மாதம் கலந்து கொண்டனர்.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஹய்தி தீவில் உள்ள `ஆப்பிள் டெலஸ்கோப்' மூலம், பூமியை நோக்கி வரும் விண் கற்களை இரவு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களைப் பெற்று, ஆய்விற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அனுப்பி வருகிறது.

இதனைப் பெறும் ஆர்வலர்கள், நகரும் வகையில் உள்ள புகைப்படங்களை ஆய்வு செய்து அதன் மூலம் விண்கற்களைக் கண்டுபிடித்து அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கோ-லேப் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழிமுறைப்படி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருள்களைக் கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பித்துள்ளனர்.

அரியலூர் ஆசிரியைகள்
அரியலூர் ஆசிரியைகள்

ஆசிரியர்களின் ஆய்வறிக்கை நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. ஆய்வறிக்கையில், 18 விண்கற்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் விண்கற்கள் குறித்து ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள ஆசிரியைகளுக்கு `மக்கள் அறிவியலாளர்' என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதனை ஆசிரியை கவிதாவிடம் பேசினோம். ``விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா எங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கொரோனா ஊரடங்கு நேரத்துல ஏதாச்சும் உபயோகமா பண்ணனும்னு நினைச்சு, நானும் கிரிஜா டீச்சரும் பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டோம். விண்கற்களால பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிடுவதற்காகத்தான் இந்தப் பயிற்சி. கோடிக்கணக்கான விண்கற்கள் பூமியைச் சுற்றி இருக்கு. இந்த வகையான விண்கற்கள் பூமியைத் தாக்கினால் பேரிழப்பை உண்டாக்கும்.

ஆசிரியர் கவிதா
ஆசிரியர் கவிதா

இது அத்தனையையும் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்க முடியாது என்பதற்காகத்தான் எங்களைப்போன்ற ஆசிரியர்கள் உட்பட பல தரப்பு மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தாங்க. அந்தப் பயிற்சியில அவங்க கொடுக்கும் புகைப்படம் மற்றும் அதன் க்ராஃப் உள்ளிட்டவற்றை சரியான முறையில கணக்கிட்டு ஆய்வு செய்தோம். அதில், 40 விதமான நகரும் பொருள்களைக் கண்டுபிடித்து ஆய்வை நாசாவுக்கு சமர்ப்பித்தோம். 18 விண்கற்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கு.

அவை விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால், இந்த நகரும் விண் கற்களை கண்டிபிடித்த நாங்களே அதுக்குப் பெயர் வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாவும் சொல்றாங்க.

மாணவர்களுடன் ஆசிரியர் கவிதா
மாணவர்களுடன் ஆசிரியர் கவிதா
Vikatan

இது உண்மையாகவே பெரிய அங்கீகாரம். அதே போல, இந்தக் குழுவில் இன்னும் சில ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களையும் இணைத்து அவங்களையும் பயிற்சியில ஈடுபடுத்தணும் என்பது என் விருப்பம்" என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு