Published:Updated:

`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது!'- விஜயபாஸ்கர் #prayforsurjeeth

திருச்சியைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர் நகைமுகன், குழிக்குள் இறங்கி தனியாளாக தம்மால் குழந்தையை மீட்க முடியும் என்று நம்பிக்கையுடன் முன்வந்திருக்கிறார்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கம் தோண்டப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. மாலை 3 மணிக்குள் துளையிடும் பணிகள் நிறைவடையும். குழந்தை தற்போது 88 அடி ஆழத்தில் உள்ளது. 90 அடி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வரை 30 அடி தோண்டப்பட்டுள்ளது. சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவர் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் அகலத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது என்று திருச்சி ஆட்சியர் சிவராஜ் தகவல் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது!'-  விஜயபாஸ்கர் #prayforsurjeeth

அப்போது ``90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. அந்தக் குழந்தை ஆக்சிஜனை ஏற்றுக் கொள்கிறதா என்று சரியாக கணிக்க முடிய இயலவில்லை. மீட்பு பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முதல்வர் மீட்புப் பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். தற்போது தோண்டப்படும் இடத்தில் 20 அடிக்கு மேல் 90 அடிவரை பாறையாகத்தான் உள்ளது. இதனால் ஆழ்துளை போடுவதில் காலதாமதம் ஆகும். அதேபோல ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனம் இதை விட சக்தி வாய்ந்தது என்பதால் அதனையும் வரவழைத்து உள்ளோம்" என்றார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 38 மணி நேரத்தைத் தாண்டியது. சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இயந்திரத்தின் மூலம் 50 அடி அளவுக்குக் குழி தோண்டப்பட்டிருக்கிறது.

96 டன் எடைகொண்ட அந்த ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரும் வழியில் 4 இடங்களில் பிரேக் டவுன் ஆனது. அதேபோல் 2 இடங்களில் அதன் டயர்கள் பஞ்சர் ஆகியிருக்கின்றன. இதனால், சம்பவ இடத்துக்கு வர கால தாமதமானது. குழந்தையை மீட்கும் பணியானது நேற்று இரவு 10 மணிக்கு மேல் தேசிய பேரிடர் மீட்புக் குழு நிறுத்தியது. அதற்கு முன்பாக குழந்தை மேலும் அதிக ஆழத்துக்குச் செல்லாதவாறு ஏர் லாக் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. 2 லாரிகளில் உபகரணங்களோடு ரிக் இயந்திரம் நள்ளிரவு 2 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்தது. அந்த இயந்திரத்தில் உபகரணத்தைப் பொறுத்த கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆனதாகச் சொல்கிறார்கள்.

ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் அதற்கு 3 மீட்டர் தூரத்தில் இணையாக ஒரு மீட்டர் விட்டத்தில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தை 80 அடி ஆழத்தில் ஏர் லாக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 100 அடி அளவுக்குக் குழி தோண்டி அந்தக் குழியில் 2 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தையை மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக 6 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தன்னார்வம் மற்றும் வீரர்களின் கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுவாசிக்க உதவும் உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர், டிரில்லிங் சாதனங்கள் உள்ளிட்ட 4 வகையான உபகரணங்களோடு தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்க இருக்கின்றனர். ஒரு சிலிண்டரில் உள்ள ஆக்ஸிஜனால் அரை மணி நேரத்துக்கு சுவாசிக்க முடியும் என்கிறார்கள். குழந்தையை மீட்க குழிக்குள் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் 4 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் செல்ல இருக்கிறார்கள்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு உபகரணங்களுடன் களத்துக்கு வந்த அவர்கள், மூன்று யுக்திகள் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் களமிறங்கினர். முதலாவதாக, ஏற்கெனவே சென்னைக் குழு கயிறு மூலம் கட்டி குழந்தையை மீட்க முயற்சி செய்ததைப் போல தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் குழந்தையின் இரண்டு கைகளிலும் கயிற்றைக் கட்டி மீட்க முயன்றனர். இரண்டரை மணிநேர முயற்சியில் குழந்தை சிறிதுதூரம் மேலே வந்த நிலையில் கயிறு நழுவியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது!'-  விஜயபாஸ்கர் #prayforsurjeeth

இதையடுத்து, தற்போது இரண்டாவது யுக்தியைக் கையாள உள்ளனர். 70 அடி ஆழத்தில் குழந்தை இருக்கும் நிலையில் ஆழ்துளைக் கிணற்றின் அருகே இன்னும் சிறிது தோண்டவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படித் தோண்டும்போது மண் சரிவு ஏற்படாத வண்ணம் ஆழ்துளை கிணற்றின் அருகே பைப் பதித்து, பின்னர் இடுக்கி போன்ற கருவியின்மூலம் குழந்தையை மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்த முயற்சிமூலம் குழந்தையை மீட்க மேலும் சில மணிநேரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒவ்வொரு செயலையும் கவனமாகக் கையாண்டு வருகிறது.

குழந்தை சுர்ஜித் 70 அடிக்குக் கீழே சென்றுவிடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு செயலையும் ஆலோசித்துச் செய்து வருகின்றனர். இந்த இரண்டாவது யுக்தி தோல்வி அடைந்தால் மூன்றாவது முயற்சியைக் கையாள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு ஏற்கெனவே 180 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்ட அனுபவம் உள்ளது. அதனால், குழந்தை சுர்ஜித்தை அவர்கள் மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அங்குள்ளவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தற்போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திலிருந்து 80 அடிக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆகப்போகிறது. இருந்தும் அவனை மீட்பதில் தொடர் சிரமம் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் உத்தரவின் பேரில் தீயணைப்புத் துறை டிஐஜி காந்திராஜன், உள்ளிட்ட அதிகாரிகள் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை ஆய்வு செய்துவருகின்றனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழுக்கள் கைகோத்துள்ளது.

`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது!'-  விஜயபாஸ்கர் #prayforsurjeeth

இவர்கள் ரிக் வண்டி எனப்படும் போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே சில மீட்டர் தள்ளி 1 மீ ஆழம் மற்றும் அகலத்தில் சுரங்கம் தோண்டி அதை குறுக்காக ஆழ்துளை கிணற்றுடன் இணைக்கப்படவுள்ளது. பின்னர் அதில் ஒரு தீயணைப்பு வீரரை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில மணிநேரங்கள் தேவைப்படும் என்பதால் சுர்ஜித்தை மீட்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும்.

ஓஎன்ஜிசியின் ரிக் கருவி வருவதற்கு இன்னும் ஒருமணிநேரத்துக்கும் மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. கருவி வந்தாலும் சுர்ஜித்தை மீட்க மேலும் நான்கு மணிநேரம் ஆகும் என தீயணைப்புத்துறை டிஐஜி காந்திராஜன் தெரிவித்துள்ளார். கருவி வந்ததும் குழித் தோண்டப்படவுள்ளது. குழிக்குள்ச் சென்று சுர்ஜித்தை மீட்க கண்ணதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளனர்.

`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது!'-  விஜயபாஸ்கர் #prayforsurjeeth

இதற்கிடையே தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் முயற்சி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் சுர்ஜித் 100 அடி ஆழத்துக்கும் கீழ் சென்றுவிட்டான் எனக் கூறப்படுகிறது. 25 மணி நேரத்துக்கும் மேலான நிலையில் இன்னும் நான்கு மணிநேரத்துக்கும் மேல் ஆகும் கூறப்பட்டுள்ளது சுர்ஜித் குறித்த கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

28 மணிநேரம் ஆன நிலையில் ரிக் வண்டி கருவி இன்னும் வரவில்லை. அதேநேரம் மழை பெய்துவருவதால் தொடர்ந்து மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் கருவி வந்துவிட்டால் மீட்பு பணிகள் வேகமெடுக்கும் என்றாலும் அதற்கே நான்கு மணிநேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே 100 அடியில் இருக்கும் சுர்ஜித் சுரங்கம் தோண்டும் மேலும் கீழே சென்றுவிட கூடாது என்பதற்காக ஏர் லாக் மூலம் அவனது கை பிடித்துவைக்கப்பட்டுள்ளது.