Published:Updated:

``கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம்; சேவல்கட்டுப் போட்டிக்கு அனுமதி வேண்டும்!"- கரூர்வாசிகள்

சண்டைக்குச் சேவல்களை தயார்படுத்தும்போது...
News
சண்டைக்குச் சேவல்களை தயார்படுத்தும்போது...

கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டுக் காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்து தயார்படுத்துகிறார்களோ, அதேபோல சண்டைச் சேவல்களையும் தயார்படுத்துவோம்.

``கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம்; சேவல்கட்டுப் போட்டிக்கு அனுமதி வேண்டும்!"- கரூர்வாசிகள்

கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டுக் காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்து தயார்படுத்துகிறார்களோ, அதேபோல சண்டைச் சேவல்களையும் தயார்படுத்துவோம்.

Published:Updated:
சண்டைக்குச் சேவல்களை தயார்படுத்தும்போது...
News
சண்டைக்குச் சேவல்களை தயார்படுத்தும்போது...

கரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டைக்கு நீதிமன்றம் தடைவிதித்திருப்பதால், பாரம்பர்ய நாட்டுச் சேவல்கள் அழியும் அபாயம் இருப்பதாக சேவல் சண்டை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கரூரைச் சேர்ந்த சேவல் வளப்போர் நம்மிடம், "ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்படி அலங்காநல்லூர் பிரசித்தமோ, அதைபோல சேவல் சண்டைக்கு கரூர் மாவட்டத்திலுள்ள பூலாம்வலசு பிரசித்திபெற்ற பகுதி. சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டு. இது ஜல்லிக்கட்டுபோல தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கி.பி 5-ம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதற்கான சான்றாக, சேவல் பற்றிய நடுகல் கிடைத்திருக்கிறது. பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டிருக்கிற.

பூலாம்வலசு
பூலாம்வலசு

சேவல் சண்டை, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு, பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது என்ற நிலை இருக்கிறது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து தயார்படுத்துகிறார்களோ, அதேபோல சண்டை சேவல்களையும் தயார்படுத்துவோம். பொதுவாகவே, சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆள வேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும்கூட, தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும்.

அதனால், அவற்றைச் சண்டையிடச் செய்வது என்பது பயிற்சியாளர்களுக்குப் பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சியோடு, நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி எனச் சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் பல வருடங்களாக இந்த சேவல் சண்டை பொங்கல் திருநாளையொட்டி தொன்றுதொட்டு நடத்தப்பட்டுவருகிறது. அதனால், நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வெற்றுக்கால் சேவல் சண்டை நடத்த அனுமதி தருமாறு சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

சண்டை சேவல்
சண்டை சேவல்

சேவல் சண்டைக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். சேவல் சண்டை நடத்துவதன் மூலமாக பாரம்பர்ய நாட்டுச் சேவல்கள் பாதுகாக்கப்படும். மேலும், நாட்டுச் சேவல்களை பாதுகாப்பதன் மூலமாக, நாட்டுக்கோழிகள் இனப்பெருக்கம் பெருகி, தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகை ஏற்படும். மேலும், சேவல் சண்டை நடத்தும்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவற்றைக் கடைப்பிடிக்க தயாராக இருக்கிறோம்" என்றார்கள்.