Published:Updated:

கைக்குழந்தையுடன் தன்னிலை மறந்த பெண்; உறவினர்களிடம் சேர்க்க உதவிய போலீஸார்!

உறவினர்களிடம் சேர்க்க உதவிய போலீஸார்!
News
உறவினர்களிடம் சேர்க்க உதவிய போலீஸார்!

அங்கு சென்ற பிறகு அந்தப் பெண் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். இரண்டு மணி நேரம் கழித்து விழித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் நீடாமங்கலம் கடைத் தெருப் பகுதியில் ஆறு மாத கைக்குழந்தையுடன் ஒரு பெண் சுற்றித் திரிந்திருக்கிறார். இவர் யார், எதற்காகக் கைக்குழந்தையுடன் நீண்ட நேரமாக இங்கேயே இருக்கிறார், இது இவருடைய குழந்தைதானா... என இப்பகுதி மக்களுக்குப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இது தொடர்பாக இந்தப் பெண்ணிடம் இப்பகுதி மக்கள் நீண்டநேரமாக விசாரித்தபோதும்கூட, தெளிவான பதில் கிடைக்கவில்லை. அதனால் அவரைப் பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த நீடாமங்கலம் காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் நீண்டநேரம் பேசிப் பார்த்தும்கூட, அவரைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை.

உறவினர்களிடம் சேர்க்க உதவிய போலீஸார்!
உறவினர்களிடம் சேர்க்க உதவிய போலீஸார்!

அதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையத்துக்கு போலீஸார் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு சென்ற பிறகு அந்தப் பெண் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். இரண்டு மணி நேரம் கழித்து விழித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ``28 வயதான இந்தப் பெண், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணவரின் பெயர் மணிகண்டன். இந்தப் பெண்ணுக்கு சில நேரங்களில் மட்டும் நினைவு தவறிவிடுகிறது.

இந்த நிலையில்தான், தன் ஆறு மாதக் கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறி, வழிதவறி நீடாமங்கலத்தில் இறங்கியிருக்கிறார். இந்தப் பெண் தன் கணவர் மணிகண்டனின் செல்போன் நம்பரை தெரிவித்தார். அவரை இங்கு வரவழைத்து, ஹேமாவை ஒப்படைத்தோம்’’ என தெரிவித்தார்கள். மனிதநேயத்துடன் செயல்பட்ட நீடாமங்கலம் காவல்துறையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz