Published:Updated:

`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன?

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மிக முக்கிய காரணமாக இருந்த நீட் ஏஜென்டை கைது செய்ய முடியாமல் திணறிவருகிறது சி.பி.சி.ஐ.டி.!

neet exam
neet exam

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டுவரும் சூழலில், இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த நீட் ஏஜென்டை கைது செய்ய முடியாமல் திணறிவருகிறது சி.பி.சி.ஐ.டி.

`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபட்டு சிறையில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி அபிராமி, அவரின் தந்தை மாதவன், மாணவன் பிரவீன், அவரின் தந்தை சரவணன், மாணவன் ராகுல், அவரின் தந்தை டேவிஸ் ஆகியோரைப் பிடித்து விசாரித்துவருகிறது சி.பி.சி.ஐ.டி.

இந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் உதவிய ஏஜென்ட் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் நண்பர் ஒருவர் மூலமாகத்தான் அந்த நீட் ஏஜென்ட், பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார் எனத் தகவல் கிடைக்கப்பெற, அந்தத் தகவல்களைத் திரட்டிக்கொண்டு தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து கேரளா புறப்பட்டுச் சென்றது.

`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன?

கேரளாவில் நீட் கோச்சிங் சென்டர் வைத்துள்ள ரஷித் என்கிற அந்த ஏஜென்ட்டைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய தனிப்படையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது சி.பி.சி.ஐ.டி.

இது தொடர்பாகப் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``இதுவரை கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஒரே ஏஜென்ட்தான் பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய உதவியிருக்கிறார். அவர் கேரளாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை தேடிச்சென்றது தனிப்படை. ஆனால், அவர், தப்பிவிட்டார். தொடர்ந்து அவரைத் தேடும் பணி நடைபெறுகிறது. விரைவில் பிடிபடுவார்” என்றார். அனைவரும் ஒரே சென்டரில்தான் தேர்வு எழுதினார்களா? எனக் கேள்வி எழுப்பியபோது, ``இல்லை. உதித் சூர்யா மும்பையில் தேர்வு எழுதியிருக்கிறார். இப்போது கைதாகியுள்ள மூவர், வேறு சென்டரில் தேர்வு எழுதியுள்ளனர்” என்றார்.

`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன?

எல்லாவற்றுக்கும் காரணமான நீட் ஏஜென்ட் பிடிபடும் சூழலில், கடந்த ஆண்டு நீட் தேர்வில் மோசடி செய்து தமிழக மருத்துவக் கல்லூரியில், யார் யாரெல்லாம் மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்றுவருகிறார்கள் என்ற தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது சி.பி.சி.ஐ.டி.!