Published:Updated:

`வெளியில இருக்கீங்க, ஜாக்கிரதையா இருங்க!'- தேனியில் மகனை எச்சரித்த `நீட்' வெங்கடேசன்

நேற்று, தன் தந்தை வெங்கடேசனைச் சந்திக்க நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள சென்னை மாணவர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், முதலில் கைதான சென்னை மாணவருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இந்நிலையில், நேற்று தனது தந்தை வெங்கடேசனைச் சந்திக்க நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் சென்னை மாணவர்.

Theni Court
Theni Court

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் மற்றும் இக்குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் தேனி தனிப்படை போலீஸார் திருப்பதி மலையடிவாரத்தில் வைத்துக் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாணியம்பாடியைச் சேர்ந்த போலி மருத்துவர் முகமது சஃபி மற்றும் அவரது மகனும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து படித்துவந்த வேலூர் மாணவரையும் கைது செய்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

`நீட் விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கொடுத்த லிஸ்ட்!' - அடுத்தகட்ட விசாரணையில் சி.பி.சி.ஐ.டி

விசாரணைக்குப் பின்னர் சென்னை மாணவர் மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சென்னை மாணவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Theni CBCID Office
Theni CBCID Office

கடந்த 17-ம் தேதி சென்னை மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, மதுரை சிறையில் இருந்த வெங்கடேசனின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெங்கடேசன் ஆஜர்படுத்தப்பட்டார். காலை 12.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். முன்னதாகவே அங்கு அவரின் மகனும் மனைவி கயல்விழியும் வெங்கடேசனைப் பார்க்கக் காத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெங்கடேசனைப் பார்த்த இருவரும் கண்ணீர்விட்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். ’’நீங்கதான் வெளியில இருக்கீங்க… ஜாக்கிரதையா இருங்க…” என இருவரிடமும் வெங்கடேசன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சிறிதுநேரத்தில், வெங்கடேசன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றக் காவலை நீட்டித்து நவம்பர் 7-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. உத்தரவு நகலைப் பெற போலீஸாருக்குச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டது. அந்த இடைவெளியிலும் தனது மகன் மற்றும் மனைவி கயல்விழியிடம் பேசிக்கொண்டிருந்தார் வெங்கடேசன். பின்னர், மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Theni Court
Theni Court

நீட் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சரவணன், டேவிஸ் முகமது சஃபி, மைனாவதி உள்பட எட்டுப் பேரின் நீதிமன்றக் காவல் இன்றோடு நிறைவடைவதால், நீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு