Published:Updated:

தூய்மைப் பணியாளர்களுக்கு `Guard of honour’ - அசத்திய நெல்லை மாநகரக் காவல்துறை 

நெல்லை மாநகராட்சி அலுவலகம்
நெல்லை மாநகராட்சி அலுவலகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரே முடங்கிக் கிடக்கும் சூழலிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுப்பு நடந்தது. 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

`அனைத்தும் நன்றாகவே நடந்தது!’ - கொரோனாவை வென்ற நெல்லை இளைஞர் உற்சாகம்

பொதுமக்களுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் வீட்டிலிருந்து வெளியே வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதில் தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது.

`மூன்று ரூல்ஸ்.. சாலையில் சுற்றினால் வாகனம் `தானம்'!' -நெல்லை போலீஸின் ஊரடங்கு அதிரடி

சாலைகள் மற்றும் வீடுகளின் குப்பைகளைச் சேகரித்து சுகாதாரத்தை உருவாக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்த மாநகரக் காவல்துறை ஆணையாளர் தீபக் தாமோர் முடிவெடுத்தார். 

தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை
தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை

அவரது உத்தரவின்படி,நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகரக் காவல்துறை சார்பாக `மரியாதை காப்பு அணிவகுப்பு’ என்னும் `கார்ட் ஆஃப் ஹானர்’ செலுத்தப்பட்டது. ஊழியர்கள் சார்பில் மாநகர சுகாதார அலுவலர் சதீஷ், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

காவல்துறை துணை ஆணையாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் காப்பு அணிவகுப்பில் நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன், உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், காவல்துறை உதவி ஆணையர் சதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

காவல்துறை அணிவகுப்பு மரியாதை
காவல்துறை அணிவகுப்பு மரியாதை

இது குறித்து காவல்துறை துணை ஆணையாளர் சரவணன் கூறுகையில், ``கொரோனா தொற்று பரவும் இந்தச் சூழலில் தூய்மைப் பணியாளர்களின் உன்னதப் பணியைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. `உங்களின் பின்னால் நாங்கள் இருக்கிறோம்’ என்பதை உணர்த்துவதற்காக இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு