Published:Updated:

துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!

ஸ்கோச் விருது பெறும் துணை ஆணையர் சரவணன்

நாடு முழுவதும் அரசுத் துறைகளில் புதுமையான நடவடிக்கைகளை வெற்றிகரமான முறையில் செய்துகாட்டும் நடவடிக்கைகளைப் பாராட்டி, ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் பெருமைக்குரிய விருதை, இந்த ஆண்டு நெல்லை மாநகர காவல்துறை வென்றுள்ளது.

துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!

நாடு முழுவதும் அரசுத் துறைகளில் புதுமையான நடவடிக்கைகளை வெற்றிகரமான முறையில் செய்துகாட்டும் நடவடிக்கைகளைப் பாராட்டி, ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் பெருமைக்குரிய விருதை, இந்த ஆண்டு நெல்லை மாநகர காவல்துறை வென்றுள்ளது.

Published:Updated:
ஸ்கோச் விருது பெறும் துணை ஆணையர் சரவணன்

மக்களின் சமூக மேம்பாட்டுக்குப் பயனளிக்கும் வகையில், நாடு முழுவதும் செயல்பட்டுவரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, 2003-ம் ஆண்டு முழுவதும் ஸ்கோச் விருது வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு, தனித்தனியே விருதுகள் கொடுக்கப்படுகின்றன. 

ஸ்கோச் விருது
ஸ்கோச் விருது

அதன்படி, நாடு முழுவதும் இருக்கும் அரசுத்துறைகளில் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டிய நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. அதற்கான நாமினேஷனில், நெல்லை மாநகர காவல்துறை இடம்பெற்றிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல்வேறு துறைகளில் வல்லுநர்களைத் தேர்வாளர்களாகக் கொண்டிருக்கும் ஸ்கோச் விருது பரிந்துரைப் பட்டியலில் நெல்லை மாநகர காவல்துறை இடம்பெறுவதற்கு மாநகர காவல்துறை துணை ஆணையாளரான சரவணன் முக்கியக் காரணமாக இருந்தார். அவர் மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் நட்புப் பாலமாக இருந்ததுடன், குற்றச்செயல்கள் குறைவதற்கான வழிமுறையாகவும் அமைந்தது. 

குறிப்பாக, ’மக்களை நோக்கி மாநகர காவல்’ என்ற புதிய திட்டப் பணிகள் மூலமாக, நெல்லை மாநகர காவல்துறைக்கு டெல்லியில் நடைபெற்ற ’ஸ்கோச்’ விருது வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் காவல் அதிகாரிகளும் காவலர்களும் அவர்களுடைய காவல் நிலைய எல்லையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

’டியர் டிசி - மதிப்புமிகு மாணவன்’ என்ற திட்டத்தின்மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது பெற்றோர்களை தலைக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது. அதைக் கடிதம்மூலம் துணை ஆணையருக்குத் தெரியப்படுத்தவும், அதில் சிறந்த கடிதத்தைத் தேர்வுசெய்து ’மதிப்புமிகு மாணவன்’ சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகிறது. 

பள்ளி மாணவர்களிடம் தலைக்கவசத்தின் அவசியத்தை விளக்கிக் கூறி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தச் சொல்கிறோம்.
நெல்லை மாநகர காவல்துறை

'நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை'என்ற திட்டத்தின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள்,  கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தப்படுகிறது. ’வேர்களைத்தேடி’ என்ற திட்டத்தின்படி, தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளைக் கணக்கெடுக்கப்பட்டு, பட்டா புத்தகம் வழங்கப்படுவதுடன், போலீஸார் வாரந்தோறும் சந்தித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறார்கள்.

சமூக ஊடகங்களில், 'மாநகர காவல்' என்ற திட்டத்தின்கீழ் ஃபேஸ்புக் , ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் இயங்கிவருகிறது. மீம்ஸ் மூலம் குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக்காகத் தனியாக யூடியூப் சேனலையே நெல்லை மாநகரக் காவல்துறை தொடங்கியிருக்கிறது. இது தவிர, ரசிகர் மன்றங்கள் மூலமாக சமூகப் பணிகள், திருநங்கைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகிறது. 

ஸ்கோச் விருதுடன் துணை ஆணையர் சரவணன்
ஸ்கோச் விருதுடன் துணை ஆணையர் சரவணன்

இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நெல்லை மாநகர காவல்துறைக்கு 'ஸ்கோச்' விருந்தாக வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் விருதைப் பெற்றார். தமிழகத்தில் சென்னை காவல்துறைக்குப் பின்னர், இந்த பெருமைக்குரிய விருதை நெல்லை மாநகர காவல்துறையே வென்றிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism