Published:Updated:

`கொரோனா பாதிப்பு; 4 நாள்கள்; உள்ளூர் பயணங்கள்!’- சுகாதாரத் துறை ரேடாரில் நெல்லை இளைஞர்

கொரோனா
கொரோனா

துபாயில் இருந்து வந்ததும் கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் இருந்தபோதிலும் ஊர் சுற்றியதுடன், நெல்லையின் மையப்பகுதியில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்திருக்கிறார்.  

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக 22-ம் தேதி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர். 

`மெர்ஸ் வைரஸ் இறப்பு 36%.. கோவிட்-19 வைரஸ் 2%’ - கொரோனா குறித்து விவரிக்கும் டாக்டர் சத்தியநாராயணன்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் மூலம் தமிழகத்திலும் நுழைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்: வடகொரியா நிலவரம்தான் என்ன?

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்பிருந்து நெல்லை பெருமாள்புரத்தில் குடியிருந்து வருகிறார். அங்கிருந்து வேலைக்காக துபாய் சென்றுள்ளார். வெளிநாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதால் அங்கிருந்து வெளியேறிய இந்தியர்களுடன் அவரும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். 

கொரோனா
கொரோனா

கடந்த 17-ம் தேதி நெல்லைக்கு வந்து சேர்ந்த அவருக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்திருக்கிறது. ஆனால், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாத அவர் நெல்லையில் சுற்றித் திரிந்துள்ளார்.

அவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் உள்ள மனைவியைச் சென்று சந்தித்திருக்கிறார். பாளையங்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவரிடம் சென்று ஊசி போட்டுவிட்டு தொடர்ந்து வெளியில் சென்றிருக்கிறார்.

representational image
representational image

சொந்த ஊரான சமூகரெங்கபுரம் சென்ற அவர், அங்குள்ள தன் நண்பரின் வீட்டில் ஒரு நாள் தங்கியிருந்துள்ளார். பின்னர், துபாய் திரும்புவதற்காக சென்னை சென்றுள்ளார். ஆனால், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும் அங்கிருந்து விமானம் மூலம் மதுரை வந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் நெல்லை வந்துள்ளார்.

நெல்லையில் இறங்கியதும் மீண்டும் மனைவியைச் சென்று பார்த்துள்ளார். அப்போது உடல்நலக் குறைவு அதிகமாக இருந்ததால், தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

`ஒருவருக்கு உறுதியான வைரஸ்; 270 பேரை இறக்கிவிட்ட அதிகாரிகள்!’ -  கேரளாவில் தொடரும் கொரோனா போராட்டம்

அவருக்கு இருந்த அறிகுறிகளைக் கண்டு அச்சம் அடைந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதை விசாரித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதை அறிந்ததும் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் 21-ம் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், தனக்கு இருக்கும் பிரச்னைகளைச் சொல்லியிருக்கிறார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது  நேற்று (22-ம் தேதி) உறுதி செய்யப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். அதனால் நெல்லை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவர் சென்று வந்த இடங்கள், அவர் சந்தித்த நபர்கள், டீக்கடை, லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறியுடன் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்த நபர் குறித்துத் தெரிய வந்ததும் மாவட்டம் முழுவதும் பீதி நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு