Published:Updated:

சென்னை டு தென் மாவட்டம்; புரோக்கர்கள் ஆதிக்கம்! -போலி இ-பாஸ்களால் கலங்கும் அதிகாரிகள்

van
van ( representational image )

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், போலி இ-பாஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் வேகமாக நடக்கிறது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் கவனமின்றி செயல்படுவதால், நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகளும் மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மீண்டும் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

`ரூ. 4000-க்கு போலி இ-பாஸ்!’ - கன்னியாகுமரி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை டிரைவர்

தொழில், வேலைவாய்ப்பு காரணமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது சென்னையில் நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு குழந்தைகளுடன் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இ-பாஸ் நிறுத்தம்? -கொரோனா பரவலால் `திடீர்' நடவடிக்கை

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களால் நோய்த்தொற்று அதிகரிப்பதால், தென் மாவட்டங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால், புரோக்கர்களின் உதவியுடன் பலரும் போலியாக இ-பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

நெல்லை மாவட்ட சோதனைச் சாவடியில், கடந்த சில தினங்களாக போலி இ-பாஸ் மூலம் வரக்கூடியவர்கள் தொடர்ச்சியாக சிக்கிவருவது வருவாய்த் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாகியிருக்கிறது. இ-பாஸ்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கிறார்கள்.

போலி இ-பாஸ்; அதிர்ச்சி கொடுத்த 5 பயணிகள்! -மாற்றுப் பாதை யோசனையால் சிக்கிய செங்கல்பட்டு டிரைவர்

சென்னையிலிருந்து 10 பேரை வேனில் அழைத்து வந்த நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, போலியான அனுமதிச் சான்று பெற்று அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் வேன் டிரைவர்கள் சேதுபதி, ரவி மற்றும் வேன் உரிமையாளரான சென்னை போரூரைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

போலியான இ-பாஸ் அல்லது அனுமதி இல்லாமல் சொந்த ஊர்களுக்கு வருபவர்கள் குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்குமாறு நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சிலர், சோதனைச் சாவடிகளுக்குச் செல்லாமல் கிராமங்கள் வழியாக நெல்லைக்குள் வந்துவிடுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

அதனால் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும். இதன்மூலம் வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை நடத்த வசதியாக அமையும்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு