Published:Updated:

`ஏழைகளுக்கு ரூ.1000 போதுமா?!’ - நெட்டிசனின் கேள்வியும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷின் பதிலும்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

பீலா ராஜேஷ், நெட்டிசன்களில் கேள்விக்கும் அவ்வப்போது ட்விட்டரில் பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து அவரிடம் ட்விட்டர் பயனாளர் ஒருவர் கேட்ட கேள்வி சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 3,374 பேர் பாதிப்படைந்துள்ளனர். மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் அதிகமான நபர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை இங்கு 485 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் 5 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாளுக்குநாள் தமிழகத்திலும் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய தகவல்களையும் அரசின் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்து வழங்கி வருகிறார். அதேபோல் தனது ட்விட்டர் பக்கத்திலும் கொரோனா தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். மேலும், நெட்டிசன்களில் கேள்விக்கும் அவ்வப்போது ட்விட்டரில் பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து பீலா ராஜேஷிடம் ட்விட்டர் பயனாளர் ஒருவர் கேட்ட கேள்வி சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் ஏழைகள் பலரும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசானது அவர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்தது. இதைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர், ``28 நாள்கள் க்வாரன்டீனில் இருக்கும் ஏழைகளுக்கு 1000 ரூபாய் போதுமானதாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பீலா ராஜேஷ், ``மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் பொருள்களுக்கு மேல் இந்தப் பணம் வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்களும் இந்தச் சமயங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நீங்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணான 1077 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்?
அடுத்த கட்டுரைக்கு