Published:Updated:

`ஆறே நாளில் மாறிய காட்சிகள்; 23 பேருக்கு கொரோனா தொற்று!' - கதிகலக்கும் கரூர் நிலவரம்

கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு

கரூர் மாவட்டத்தில் மட்டும் 23 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் 6 நாள்களுக்கு முன்புவரை ஒருத்தருக்குக்கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால், நேற்று கரூர் மாவட்டத்தில் 23 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பாதுகாப்பு
பாதுகாப்பு

ஈரோடு மாவட்டம், தமிழக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் மூன்றாவது மாவட்டமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் ஒருத்தருக்குக்கூட இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படவில்லை என்று மக்கள் பெருமூச்சுவிட்டு வந்தனர்.

`ஒருவருக்குக் கொரோனா; தெருவில் வளைய வந்த சகோதரர்!' -அதிர்ச்சியில் உறைந்த குளித்தலை மக்கள்

கடந்த 1-ம் தேதி, டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 30 பேர்களில் ஒருவரான குளித்தலையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட, கரூர் மாவட்டத்தில் முதல் கணக்கு தொடங்கியது. மூன்றாம் தேதி, அதே டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த தோகைமலையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதுகாப்பு
பாதுகாப்பு

அடுத்த நாளே டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களில் 15 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட, கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதனால், கரூர் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்தச் சூழலில், நேற்று முன்தினம் மூன்று நபர்களுக்கும் நேற்று 2 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட, கரூர் மாவட்டத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து நிற்கிறது. இதனால், காவல்துறையும் வருவாய்த்துறையும் மாவட்டம் முழுக்க பலத்த பாதுகாப்பை எற்படுத்தி வருகிறார்கள்.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்ட 2 பேரும், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள். ஏற்கெனவே பள்ளப்பட்டியில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளப்பட்டியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதனால், அந்தப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவை இருக்கிறதா என மருத்துவக்குழுவினர் பரிசோதித்து சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

`தனிமைப்படுத்தப்பட்ட 300 செவிலியர்கள்; 40 பேருக்குக் கொரோனா' - சோகத்தில் மும்பை மருத்துவமனை

அங்கு 50 வீடுகளுக்கு, துணை கலெக்டர் நிலையிலுள்ள ஓர் அதிகாரியை நியமித்து கண்காணிப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனரா என பொதுஇடங்களில் ஆங்காங்கே அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு கடைப்பிடிக்காதவர்களின் கடைகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட வீதிகளில் இருப்பவர்களுக்கு போன் மூலம் ஆர்டர் செய்து உணவுப் பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுஒருபுறமிருக்க, திண்டுக்கல், நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் இருந்த 45 நபர்கள், இடப்பற்றாக்குறையால், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு