Published:Updated:

நீலகிரி மாவட்ட நிர்வாகம் அதிரடி: `கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டாஸ்மாக்கில் மது!’

டாஸ்மாக்
டாஸ்மாக்

`கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றைக் காண்பித்தால் மட்டுமே நீலகிரி டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் வழங்கப்படும்’ என அதிரடி உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவலைத் தடுக்க, கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவரும் நீலகிரி மாவட்டம், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் முன்னோடி மாவட்டமாக விளங்கிவருகிறது. தற்போது வரை 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. கேரளா, கர்நாடக மாநில எல்லையில் அமைந்திருப்பதாலும், தற்போது சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைபிடித்துவருவதோடு, நூறு சதவிகித தடுப்பூசி இலக்கை நோக்கி தீவிரம் காட்டிவருகிறது மாவட்ட நிர்வாகம்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதன் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான விவரங்களைப் பதிவுசெய்த பின்னரே மதுவகைகளை வழங்க வேண்டும் எனப் புதிய நடைமுறையை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை: டாஸ்மாக் கடையில் நடந்த மோதல்; பழிக்குப் பழியாக நடுரோட்டில் நடந்த கொலை!

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கையில், ``மாவட்டத்தில் தற்போதுவரை 97 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்திருக்கிறது. மீதமுள்ள 3 சதவிகிதம் பேரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்துவோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களைல் கண்டறிவது எளிதாக இருக்கும்" என்றார்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஊட்டியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர், ``மது வாங்க வந்தா கண்டிப்பா கொரோனா தடுப்பூசி போட்ட ஆதாரம் கண்டிப்பா இருக்கணும். இல்லாம வந்தா கண்டிப்பா மது வகைகளைக் கொடுக்க மாட்டோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு