Published:Updated:

டாஸ்மாக்: `படிப்படியாக மூடுவோம்னு சொன்னாங்க!’ - புதிய கடைகளால் மக்கள் அதிர்ச்சி

டாஸ்மாக்

`தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’னு 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா அறிவிச்சாங்க. ஆட்சிக்கு வந்த பிறகும்கூட இந்த உறுதிமொழியைக் கொடுத்தாங்க. இப்போ முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அதைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கார். ஆனால்...

டாஸ்மாக்: `படிப்படியாக மூடுவோம்னு சொன்னாங்க!’ - புதிய கடைகளால் மக்கள் அதிர்ச்சி

`தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’னு 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா அறிவிச்சாங்க. ஆட்சிக்கு வந்த பிறகும்கூட இந்த உறுதிமொழியைக் கொடுத்தாங்க. இப்போ முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அதைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கார். ஆனால்...

Published:Updated:
டாஸ்மாக்

தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் மதுப்பான கடைகளால், பல்வேறுவிதமான சமூகச் சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனால் அந்தக் கடைகளை தமிழக அரசு நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக, கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில்தான் `படிப்படியாக இந்தக் கடைகள் மூடப்படும்’ என ஆளும் அ.தி.மு.க அரசு வாக்குறுதி அளித்துவருகிறது. ஆனால் யதார்த்தமோ கசப்பானது. திருவாரூர் மற்றும் தஞ்சைப் பகுதிகளில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, புதிய மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அமைந்துள்ளது குன்னியூர் கிராமம். இங்கு பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக்கின் புதிய மதுபான கடை திறப்பதற்கான நடடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கினார்கள். இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டபோதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆகஸ்டு 21-ம் புதிய மதுபான கடை திறக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் ஆதங்கத்தோடு பேசிய அப்பகுதி மக்கள் ``கொரோனா ஊரடங்கால கடந்த நாலு மாசமா எங்க ஊர் ஜனங்க வருமானமில்லாமல் தவிச்சிக்கிட்டு இருக்கோம். இப்போதான் கூலி வேலைகளுக்குப் போயி, கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் வர ஆரம்பிச்சிருக்கு. இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நேரத்துல மக்களைப் பத்திக் கொஞ்சமும் கவலைப்படாம, டாஸ்மாக் கடையைத் திறக்க இந்த அதிகாரிகளுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரியலை. அதுமட்டுமில்லாம, இங்கே ஸ்கூல், கோயில் எல்லாம் இருக்கு. வெளியில வேலைக்கு போயிட்டு வர்ற பெண்களும் இந்த வழியாகத்தான் வருவாங்க. இந்த இடத்துல டாஸ்மாக் கடையை திறந்தா, மக்கள் எப்படி நிம்மதியா இருக்க முடியும்... `இதை உடனடியா இங்கேயிருந்து அகற்றணும்’னு திருவாரூர் ஆட்சியரை வலியுறுத்திக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகிலுள்ள உசிலம்பட்டி கிராமத்திலும் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இங்கு கடை திறக்கப்படவுள்ள பகுதியின் வழியாக, பாளையபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இன்னும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கு மதுபான கடை திறக்கப்பட்டால், பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இது குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள் ``மதுவால் ஏற்படும் சீரழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. இது நம் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லாவே தெரியும். மது விலக்கை அமல்படுத்தி கோரி, தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் இங்க நடந்துக்கிட்டேதான் இருக்கு. தியாகி சசி பெருமாள் இதுக்காகவே உயிர்த் தியாகம் செய்தார். `படிப்படியாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’னு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா அறிவிச்சாங்க. ஆட்சிக்கு வந்த பிறகும்கூட இந்த உறுதிமொழியைக் கொடுத்தாங்க. இப்போ முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இதைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கார். ஆனா, இதுக்கு நேர் மாறாக, புதுசு புதுசா மதுக்கடைகளைத் திறந்துக்கிட்டே இருக்காங்க. ஏற்கெனவே உள்ள கடைகளையே மூடணும்னு வலியுறுத்திக்கிட்டு இருக்குற நேரத்துல, புதிதாகக் கடைகள் திறக்குறதுங்கறது, மக்கள் விரோதச் செயல்” என கொந்தளிக்கிறார்கள்.