Published:Updated:

`பேச விருப்பமில்லை... பெற்றோரோடு போகிறேன்?!' -சேலம் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

காதல் ஜோடி
காதல் ஜோடி

சேலம் மாவட்டம் கொளத்தூரில் கடந்த 9-ம் தேதி செல்வன் - இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி 4 நாள்களுக்குப் பின் காவல் நிலையத்தில் ஆஜராகி பெற்றோரோடு போவதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் செல்வன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர். பவானி குருப்பநாயக்கம்பாளையம் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும்போது பழக்கமாகி காதலித்து வந்தனர்.

`பேச விருப்பமில்லை... பெற்றோரோடு போகிறேன்?!' -சேலம் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

பெண் வீட்டார் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளாததால் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் கடந்த 9.3.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

“என் இளமதியை என்னோடு சேர்த்து வெச்சுருங்க!”

அதையடுத்து, அன்று இரவு பெண் வீட்டாரோடு 50-க்கும் மேற்பட்ட சாதியக் கும்பல் மணமக்களையும், திராவிடர் கழகத்தினரையும் கடுமையாகத் தாக்கி இளமதியைக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் இளமதி கடத்தப்பட்டு 4 நாள்கள் கடந்த நிலையில், இன்று மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி தனது வழக்கறிஞரோடு ஆஜரானார். அதையடுத்து, காவல் நிலையத்தில் பா.ம.க-வினரும் திராவிடர் விடுதலை கழகத்தினரும் ஆஜரானார்கள். அதனால் காவல் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

`பேச விருப்பமில்லை... பெற்றோரோடு போகிறேன்?!' -சேலம் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

இதற்கிடையே, ஈரோடு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் நாத்திக ஜோதியை பெண்ணிடம் பேச அனுமதித்தனர். பெண் பேச விருப்பமில்லை. பெற்றோர்களோடு போவதாக தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், பெண் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் நாத்திக ஜோதி. இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

`இதுவரை எந்தத் தகவலும் இல்லை' -சேலம் பெண் கடத்தப்பட்ட வழக்கில் என்ன நடக்கிறது?
அடுத்த கட்டுரைக்கு