Published:Updated:

`சேத்துப்பட்டை தொடர்ந்து ஆவடி பசுமை பூங்காவிலும் படகு சவாரி'- உற்சாகத்தில் சென்னை வாசிகள்!

மாசு நிறைந்த இந்த தொழில் நகரத்தில் மக்கள் தங்களின் விடுமுறை நாட்களில் சென்று ரிலாக்ஸ் செய்யும் இடங்கள் தான் இந்த `எகோ பார்க்'ஸ்.

பசுமை பூங்கா
பசுமை பூங்கா

வேலை பளு, மன அழுத்தம், என பல காரணிகளால் அவதிப்படும் சென்னை வாசிகள் அவ்வப்போது மன அமைதியை தேடி பூங்காக்கள், கோயில்கள் மற்றும் மெரினா பீச் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். மாசு நிறைந்த இந்த தொழில் நகரத்தில் மக்கள் தங்களின் விடுமுறை நாட்களில் சென்று ரிலாக்ஸ் செய்யும் இடங்கள் தான் இந்த `எகோ பார்க்'ஸ்.

`சேத்துப்பட்டை தொடர்ந்து ஆவடி பசுமை பூங்காவிலும் படகு சவாரி'- உற்சாகத்தில் சென்னை வாசிகள்!

சென்னையில் அடையாறு தொல்காப்பியர் பசுமை பூங்கா மற்றும் சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஆகிய இரண்டும் தான் மக்கள் அதிகமாக செல்லும் பசுமை பூங்காக்கள் ஆகும். பசுமை போர்வையில் நீர் நிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் மெதுவாய் நடந்து இயற்கையோடு சிறிது நேரத்தை செலவழித்து மன நிறைவு பெறவே மக்கள் இது போன்ற பசுமை பூங்காக்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுவரை சென்னையில் முட்டுக்காடு படகு குழாமை தவிர்த்து சேத்துப்பட்டு எகோ பூங்காவில் மட்டுமே படகு சவாரி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவிலும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா ஆவடியின் புதிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

`சேத்துப்பட்டை தொடர்ந்து ஆவடி பசுமை பூங்காவிலும் படகு சவாரி'- உற்சாகத்தில் சென்னை வாசிகள்!

சேத்துப்பட்டு எகோ பார்க்கில் மட்டுமே படகு சவாரி இருந்து வந்தது. ஆனால் அங்கும் தற்போது தண்ணீர் இல்லாததால் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவடி பசுமை பூங்காவில் படகு சவாரி துவங்கி இருப்பது சென்னை வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 54 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமை பூங்காவில், பறவைகளின் வசிப்பிடத்திற்காக இரண்டு செயற்கை தீவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. 4 கிலோமீட்டர் அளவில் வாக்கிங் செல்வோருக்காக நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என எல்லாம் இருக்க, இன்னும் கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கிறது இந்த படகு சவாரி.

கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று இந்த படகு சவாரியை தொடக்கி வைத்தார். அன்றைய தினம் மட்டும் இலவசமாக மக்கள் படகில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆவடி மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனமும் சேர்ந்து இந்த படகு சவாரியை நடத்துகிறது. மேலும் இந்த படகு சவாரியின் மூலம் வரும் வருவாயில் 85% தனியார் நிறுவனத்துக்கும் மீதமுள்ள 15% மாநகராட்சிக்கு கிடைக்கும் என்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார்.

தனியார் நிறுவனம் முதற்கட்டமாக 12 பெடலிங் வகை படகுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையாளர்கள் போட்டிங் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பொதுவாக இந்த எகோ பார்க் காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபயிற்சி செய்வோரின் வசதிக்காக 4 கிலோமீட்டர் சுற்றளவில் நடைபாதைகளும், போதிய மின் விளக்கு வசதிகளும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூபாய் 50 வசூலிக்க படுகிறது. அதே போல் சிறியவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூபாய் 25 வசூலிக்கப்படுகிறது. ஃலைப் சேவிங் ஜாக்கெட்டுகள், விபத்து நேரங்களில் பயணிகளை காப்பாற்ற ஃலைப் சவேர்ஸ் என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த பூங்காவில் அமைந்துள்ளன.

சுமார் 28 கோடி அளவில் பொதுப்பணி துறையால் புனரமைக்கபட்ட இந்த பசுமை பூங்காவிற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது இந்த படகு சவாரி எனலாம். ஆவடியின் புதிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக இந்த எகோ பார்க் உருவெடுத்துள்ளது, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிதாக வந்தடையும் வகையில் இந்த பசுமை பூங்கா அமைந்துள்ளது, மேலும் இந்த பூங்காவில் பல வகையான பறவைகளும் குடி கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது, இயற்கையின் அரவணைப்பில் சிறிது நேரம் சென்னையில் செலவழிக்க விரும்புவோர்க்கு இந்த பசுமை பூங்கா சிறந்த தேர்வாகும்.