Published:Updated:

`விதிகளுக்கு முரணாகச் சான்றிதழ்’ - சேலத்தில் 3 மருத்துவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

சோதனை

சேலத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கத் தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாகச் சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைப் பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திவருகிறார்கள்.

`விதிகளுக்கு முரணாகச் சான்றிதழ்’ - சேலத்தில் 3 மருத்துவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

சேலம் ஸ்ரீரங்கம் பாளையத்திலுள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோகர், சூரமங்கலத்திலுள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார், ஜான்சன் பேட்டையிலுள்ள மருத்துவப் பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று காலை 6:30 மணி அளவில் சேலம், தருமபுரி பகுதிகளைச் சேர்ந்த விஜிலென்ஸ் பிரிவினர் மேற்கண்ட மருத்துவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.