Published:Updated:

கோவை - தேனி - ராமநாதபுரம் உட்பட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - போலீஸ் குவிப்பு

வாலி நோக்கத்தில் என்ஐஏ சோதனை நடத்தும் வீடு

தமிழ்நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வுத்துறை (NIA) அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவை - தேனி - ராமநாதபுரம் உட்பட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - போலீஸ் குவிப்பு

தமிழ்நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வுத்துறை (NIA) அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Published:Updated:
வாலி நோக்கத்தில் என்ஐஏ சோதனை நடத்தும் வீடு

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பரக்கத்துல்லா (40). இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவராகவும், மாநில மீனவர் அணித் தலைவராகவும் இருந்துவருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் பரக்கத்துல்லா வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து வீட்டைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், கூடுதலாக உள்ளூர் போலீஸாரும் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுவருகின்றனர். சோதனை குறித்து தகவல் அறிந்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பரக்கத்துல்லா வீட்டின் முன்பு குவிந்து, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருவதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

கோவை - தேனி - ராமநாதபுரம் உட்பட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - போலீஸ் குவிப்பு

எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாகக் குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுவருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகலின் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மூன்று மணி நேரமாக அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.

திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 3-வது மாடியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் சோதனை நடைபெறும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம்
திண்டுக்கல் சோதனை நடைபெறும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகம்

இதனால் அலுவலகம் இருக்கும் முகமதியாபுரத்தில் சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி துப்பாக்கி ஏந்திய அதிவேக அதிரடிப்படை மற்றும் திண்டுக்கல் காவல்துறையினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தடுப்புகளை மீறி கட்சி அலுவலகத்துக்குச் செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அப்போது தேசிய புலனாய்வுத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மூன்று மணி நேரம் சோதனை முடிந்து அதிகாரிகள் அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. மூன்று மணி நேர சோதனைக்குப் பின்பு முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கட்சியினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கட்சியினர்

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே முத்துத்தேவன் பட்டியில் செயல்படும் `அறிவகம்’ என்ற மதரஸாவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.‌ இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் அமைப்பினர் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று கம்பம் பகுதியிலுள்ள யாசர் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

கோவை கரும்புக்கடைப் பகுதியில், பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரின் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். காலை 5:30 மணி அளவில் இஸ்மாயில் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

இஸ்மாயில் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், 7 மணி அளவில் அதிகாரிகள் இஸ்மாயிலை விசாரணைக்காகத் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரும்புக்கடை - ஆத்துப்பாலம் அருகே சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தி பி.எஃப்.ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள 'அறிவகம் பெண்கள் மதரஸா'வில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் வீடுகளில் காலை 4 முதல் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

கோரிப்பாளையம், நெல்பேட்டை சுங்க பள்ளிவாசல், வில்லாபுரம், யாகப்பா நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றுவருகிறது.