Published:Updated:

தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பிலிருந்ததாகத் தகவல் - கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

என்.ஐ.ஏ சோதனை

தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கார் டிரைவர் வீட்டில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பிலிருந்ததாகத் தகவல் - கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கார் டிரைவர் வீட்டில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Published:Updated:
என்.ஐ.ஏ சோதனை

தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக சிவகங்கையைச் சேர்ந்த கார் டிரைவர் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரிக்கு எதிரில் விக்னேஸ்வரன் என்ற இளைஞரின் வீடு அமைந்திருக்கிறது. இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்துவிட்டு, தற்போது சிவகங்கையில் வேலை பார்க்கிறார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 6:00 மணியளவில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மூன்று பேர் விக்னேஸ்வரன் வீட்டில் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் உள்ளூர் போலீஸ்காரர்களும், பகுதி ஆர்.ஐ, வி.ஏ.ஓ ஆகியோர் உடனிருந்தனர்.

விக்னேஷ்வரன் வீடு
விக்னேஷ்வரன் வீடு

விக்னேஸ்வரன் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக மட்டும் கூறப்பட்டது.

வீட்டிலிருந்த விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கிருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களையும் கைப்பற்றினர்.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், சோதனை குறித்து முழுமையான தகவல் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே விக்னேஷ்வரன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவிய நிலையில், அவருக்கும் தங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அந்தக் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர்.