Published:Updated:

கைவிடப்படும் குழந்தைகளுக்காக புதிய திட்டம்! - அசத்தும் நீலகிரி

தயவுசெய்து சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில், முட்புதர்களில் குழந்தைகளை வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டுவிட்டுச் செல்லுங்கள்.

Baby care
Baby care

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஊட்டி மஞ்சனக்கொரை கிராமம் அருகில் உள்ள வனத்தில், பிறந்து தொப்புள் கொடிகூட காயாத பச்சிளம் ஆண் குழந்தையை வீசிச்சென்றிருந்தனர். சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உலவும் காட்டில், மாலை நேரத்தில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட இரண்டு பெண்கள், பத்திரமாக அதை மீட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

Baby care
Baby care

இதேபோல், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வனத்தில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அதிகாலை வாட்டும் குளிரில் வீசிச்சென்றிருந்தனர். இந்தக் குழந்தையையும் மீட்டு, மாவட்ட நிர்வாகம் பராமரித்துவருகிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

நீலகிரியில், பச்சிளம் குழந்தைகளைச் சாலையோரங்களிலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலும் வீசுவதால், குழந்தைகளுக்கு ஆபத்து நேர்கிறது.

Baby care
Baby care

இதைத் தடுக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதிளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.

`குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள், தயவுசெய்து குழந்தைகளைச் சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகள் மற்றும் முட்புதர்களில் வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

Baby care
Baby care

இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள், "இந்தத் தொட்டிலில் அலுவலக முகவரி மற்றும் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்களும் அச்சிடப்பட்டுள்ளது. எனவே, குழந்தையை விட்டுச் சென்றதும், தொட்டிலில் காணப்படும் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட மாட்டது. ரகசியம் காக்கப்படும். குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.