`தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி’ என அழைக்கப்படும் நீலகிரியில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு அணைகள் இருக்கின்றன.
இந்த அணைகளிலுள்ள நீரைக்கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், குடிநீர் உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த தென்மேற்கு பருவமழை தாமதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. 40 நாள்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால், அனைத்து அணைகளும் நிரம்பின.
இந்தநிலையில் கடந்த 15-ம் தேதியிலிருந்து நான்கு நாள்களாக கனமழை பெய்துவருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துவரும் நிலையில், அணைகள் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியுள்ளன. மின் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் அணைகளிலும் 90 சதவிகிதத்துக்கும் மேல் நீர் இருப்பு இருக்கிறது. அணைகள் அனைத்தும் கடல்போலக் காட்சியளிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தவிர குடிநீர் ஆதாரமாக நீர்த் தேக்கங்கள் உள்ளிட்டவை நிரம்பிவருகின்றன. வனப்பகுதிகளிலுள்ள தடுப்பணைகளிலும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.
``அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெற்றுவருகிறது. இந்த முறை கோடைக் காலத்தில் மின் உற்பத்தியிலும் பாதிப்பு இருக்காது" என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரியில் மின் உற்பத்திக்கு ஆதாரமக இருக்கும் அணைகளிலுள்ள நீர் இருப்பு:
அணைகள் - மொத்த அடி - தற்போதைய நீர் இருப்பு
அப்பர்பவானி - 210 - 200
அவலாஞ்சி - 171 - 169
எமரால்டு - 184 - 178
மாயார் - 17 - 16
பைக்காரா - 100 - 91
முக்கூருத்தி - 18 - 16
பார்சன்ஸ்வேலி - 77 - 75
போர்த்திமந்து - 130 - 123
சாண்டிநல்லா - 49 - 45
குந்தா - 89 - 87
கெத்தை - 156 - 153