Published:Updated:

`320 கிராம் பிளீச்சிங் பவுடர்... வீட்டிலேயே கிருமிநாசினி ரெடி!’- நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் யோசனை

Bus
Bus

கிருமிநாசிகளின் விலை உயர்வை தடுக்கவும், தட்டுப்பாட்டை போக்கும்வகையில் வீடுகளிலேயே கிருமிநாசினி தயாரிக்கும் முறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த உலக மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சர்வதேச மருத்துவ பேரிடராக அறிவிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நாளுக்குநாள் தொற்று பரவல் அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது.

market
market

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் கோவிட் -19 நோய்க்கு இதுவரை முறையாக மருந்து கண்டறியப்படாத நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரத்தைப் பேணும் அத்தியாவசிய பொருள்களான முகக்கவசம், கிருமிநாசினிகள் போன்றவற்றின் தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சாதகமாக்கிக்கொண்ட பலர் இதை லாப சந்தையாக்கி பல மடங்கு விலையை உயர்த்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

mask
mask

கிருமிநாசினி தட்டுப்பாட்டை ஈடுகட்டும் வகையில் வீட்டிலேயே மிகச்சிறந்த கிருமிநாசினியைத் தயாரிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி 320 கிராம் பிளீச்சிங் பவுடரை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு கலக்க வேண்டும், சிறிதுநேரம் கழித்து பிளீச்சிங் பவுடர் அடியில் தங்கியவுடன் தெளிந்த நீரை சேமித்து இதை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

press meet
press meet

இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமிநாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு 9 லிட்டர் கிருமிநாசினியும் கிடைக்கும். இதைக்கொண்டு வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு