Published:Updated:

நீலகிரி: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; 10 ஆயிரம் பேரைத் தங்கவைக்க 450 மீட்பு முகாம்கள் தயார்!

நீலகிரி - இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்

கூடலூரில் பெய்துவரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மங்குளிப் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நபரை ஊர் மக்கள் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; 10 ஆயிரம் பேரைத் தங்கவைக்க 450 மீட்பு முகாம்கள் தயார்!

கூடலூரில் பெய்துவரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மங்குளிப் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நபரை ஊர் மக்கள் பத்திரமாக மீட்டனர்.

Published:Updated:
நீலகிரி - இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்

நீலகிரி மாவட்டத்தில், வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை சற்று தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், மழை தற்போது தீவிரமடைந்திருக்கிறது. கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் நீரின் அளவு மெல்ல உயர்ந்துவருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் மழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

சேதமடைந்த பாலம்
சேதமடைந்த பாலம்

கூடலூரில் பெய்துவரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மங்குளிப் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நபரை ஊர் மக்கள் பத்திரமாக மீட்டனர். ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கிய காருக்குள் இருந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர் மழையால் சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சீரமைப்புப் பணிகள் உடனுக்குடன் நடைபெற்றுவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம், ``கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 பேர் தங்கும் வகையில் 450 மீட்பு முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.

 இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்
இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்

அரசுத்துறை அலுவலர்கள் களத்தில் தயார்நிலையில் இருக்கிறார்கள். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மழையை எதிர்கொள்ளத் தயார்" என்று தகவல் தெரிவித்திருக்கிறது.