Published:Updated:

`பாரம்பர்ய உடை, இசை, நடனம்!’- வாட்டும் குளிரிலும் நடந்த கோத்தர் பழங்குடிகளின் திருவிழா

Kotha tribe
Kotha tribe

சுமார் 2,000 மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கோத்தர் பழங்குடிகள் 7 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இயற்கையையும் குல தெய்வமான அய்யனோர் அம்மனோரை வழிபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குறும்பர் என‌ 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கென தனித்தனி பாரம்பர்ய கலாசாரத்தைக் கொண்டு, இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். பாரம்பர்ய உணவு, உடை, இசைக்கருவிகள், நடனம், பாடல் வழிபாடு போன்றவற்றோடு தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

Kotha tribe
Kotha tribe

சுமார் 2,000 மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கோத்தர் பழங்குடிகள் 7 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இயற்கையையும் குலதெய்வமான அய்யனோர் அம்மனோரை வழிபட்டு வருகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோத்தர் மொழியைப் பேசுகின்றனர். இதற்கு எழுத்து வடிவம் கிடையாது.

இந்த நிலையில், ஊட்டியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கொல்லிமலை கோத்தர் பழங்குடி கிராமத்தில் பழைமையான அய்யனோர் அம்மனோர் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.

Kotha tribe
Kotha tribe

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வழிபாட்டில் ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடையணிந்து அறுவடை செய்த தினைகளை சமைத்து இயற்கைக்குப் படைத்து வழிபட்டனர். மேலும் இரவு, பகலாக நடனமாடி வழிபட்டனர்.

திருவிழா குறித்து ஊர்மக்கள், ``ஆதிகாலம் தொட்டு இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறோம். இயற்கையும் முன்னோர்களும் எங்களுக்கு குலதெய்வம். ஆண்டுக்கு ஒருமுறை இந்த விழா நடத்துவதன் மூலம் அவர்களுக்கு நன்றிக் கடனை செலுத்துகிறோம்.

Kotha tribe
Kotha tribe

பனி, குளிர் என எதையும் பார்க்காமல் ஆண்களும் பெண்களும் இசைக்கருவிகளை இசைத்து இரவு, பகலாக நடனமாடி நன்றியை தெரிவிப்போம். விழா நடைபெறும் நாள்களில் வெண்ணிற உடை மட்டுமே அணிய வேண்டும். கடுமையான விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு