Published:Updated:

`நீட்டிக்கப்பட்ட விடுப்பு; வெளி நபர்களுக்கு நோ-என்ட்ரி!'- பாதுகாப்பு வளையத்தில் ராணுவ பயிற்சி மையம்

MRC
MRC

ராணுவ அருங்காட்சியகம் மூடல், வெளி வாகனங்களுக்குத் தடை, விடுமுறையில் சென்ற வீரர்களுக்கு விடுப்பு நீட்டிப்பு எனத் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று அதிகமுள்ள கேரளா, நாளுக்கு நாள் தொற்று அதிகரித்தவண்ணம் உள்ள கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தொடர் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

MRC
MRC

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நீலகிரியில் சுற்றுலாத்தலங்கள் முதல் மலை ரயில் வரை அனைத்தும் மூடப்பட்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் எனப்படும் ராணுவ பயிற்சி மையம், டி.எஸ்.எஸ்.சி எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட இடங்கள் சுகாதார வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

MRC
MRC

பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறையில் சென்றுள்ள ராணுவ வீரர்கள் மீண்டும் பயிற்சி முகாம்க்கு வர தற்காலிக கட்டுப்பாடு விதித்து விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாமை சுற்றியுள்ள சாலைகளில் வெளி மாநில வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் போன்றவை மூடப்பட்டுள்ளன். தீவிர சுகாதார சோதனைக்குப் பின்னரே உள்ளூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

MRC
MRC

ராணுவ முகாம் மற்றும் பயிற்சி மையத்தில் தொற்று ஏற்பட்டால் பெரும் அச்சுறுத்தலில் கொண்டு சேர்க்கும் என்பதால் சமரசமின்றி கடுமையான சுகாதார பாதுகாப்பு வழிமுறிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு