Published:Updated:

நீலகிரி: சுற்றுலாத்தலங்களில் அனுமதி நேரம் குறைப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரம்!

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
News
அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் சுற்றுலாத்தலங்களில் பார்வையாளர்களுக்கான அனுமதி நேரம் நாளை முதல் குறைக்கப்படுகிறது.

சுற்றுலா சிறப்பு வாய்ந்த மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கவும், இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். நீலகிரிக்கு வரும் பயணிகளைக் கவர, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா போன்ற பல்வேறு பூங்காக்களில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலும், தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா உள்ளிட்டவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டிலும், அவலாஞ்சி, ஷூட்டிங் மட்டம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் போன்றவை வனத்துறை கட்டுப்பாட்டிலும் இயங்கிவருகின்றன. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றானண்டு பழைமைவாய்ந்த மலை ரயிலில் பயணிக்கவும், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி
ஊட்டி

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை நலிவடைந்து பயணிகளின் வருகை விகிதமும் வெகுவாகச் சரிந்தது. தற்போதைய விழாக்கால விடுமுறை மற்றும் பனிக்காலத்தைக் கொண்டாடும் வகையில் ஊட்டிக்குப் படையெடுக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. அதேவேளையில், கொரோனா தொற்றுப் பரவலும் மெல்ல அதிகரித்துவருகிறது. கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் சுற்றுலாத்தலங்களின் அனுமதி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

``அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிநபர் இடைவெளி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராதம் தொடர்ச்சியாக வசூலிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.