Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’-கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரிப் பெண்

திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்ற 22 வயதான இளம் பட்டதாரிப் பெண், 112 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதி 110 வாக்குகள் பெற்று 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான இடைத்தேர்தல் மசினகுடி 4, சேரங்கோடு 11 ஆகிய வார்டுகளிலும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு உறுப்பினர் தேர்வுக்கான இடைத்தேர்தலும் கடந்த 9-ம் தேதி நடைபெற்று முடிந்தன.

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் உத்தமன்
வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் உத்தமன்

இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கூடலூர், கோத்தகிரியில் காலை 8 மணிக்குத் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் (பெண்கள்) மொத்தம் உள்ள 451 வாக்குகளில் 287 வாக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் மூன்று செல்லாத வாக்குகள். திமுக ஆதரவுடன் திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்ற 22 வயதான இளம் பட்டதாரி பெண் 112 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதி 110 வாக்குகள் பெற்று இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் பாரதி
வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் பாரதி

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடி 4-வது வார்டு குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உத்தமன் 1,249 வாக்குகளைப் பெற்றுவெற்றி பெற்றார். அதேபோல் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரங்கோடு 11-வது வார்டு குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பாரதி 1,706 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு