Published:Updated:

`ஊருக்கு வெளியில் மூங்கில் குடிசை!' -ஊர் திரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்த பழங்குடிகள்

 கூடலூர் பழங்குடிகள்
கூடலூர் பழங்குடிகள்

வெளியூர்களில் இருந்து திரும்பும் தங்கள் மக்களுக்கு, தாங்களாகவே ஒன்றிணைந்து குடிசைகள் அமைக்கும் கூடலூர் பழங்குடிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாழும் கூலித் தொழிலாளர்கள், இந்த இரண்டு மாநிலங்களைச் சார்ந்தும் உள்ளனர். அதிலும் பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் அண்டை மாநிலங்களில் வேலை செய்துவந்தனர்.

 கூடலூர் பழங்குடிகள்
கூடலூர் பழங்குடிகள்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் பெரும்பாலான மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.

இப்படி தவிக்கும் கூடலூர், பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள் பலர் வெளியூர்களில் மாட்டிக்கொண்டுள்ளனர். சிலர், வனப்பகுதி வழியாக நடந்தே தங்கள் ஊருக்குத் திரும்புகின்றனர். இப்படி ஊருக்குத் திரும்பும் மக்களை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்துக் கண்காணித்துவருகிறது.

`மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் தவிக்கக் கூடாது!' -ஊரடங்கில் உதவிக்கரம் நீட்டிய நீலகிரி ஆசிரியர்கள்

கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொள்ளி கிராம மக்கள், தங்கள் ஊருக்கு வெளியூரிலிருந்து திரும்புவோரை தங்கவைக்க, மூங்கில் உள்ளிட்டவற்றைக் கொண்டு குடிசை அமைத்துவருகின்றனர்.

``10 பேர் தாராள இடைவெளியுடன் தங்கும் அளவுக்கு குடிசை அமைக்கிறோம். மேலும் கர்நாடகாவில் சிக்கித் தவிக்கும் தங்கள் சொந்தங்களை மீட்டுவர உதவுங்கள், அவர்களையும் இங்கு தனிமையில் தங்கவைத்து பார்த்துக்கொள்கிறோம்" எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

 கூடலூர் பழங்குடிகள்
கூடலூர் பழங்குடிகள்

பழங்குடிகள் பொறுப்புணர்வுடன் நடந்து, தங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், பழங்குடி மக்களும் தங்கள் பங்குக்கு ஒத்துழைப்பு அளிக்கும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம்.. மீண்ட நீலகிரி- மகிழ்ச்சியில் மக்கள்
அடுத்த கட்டுரைக்கு