Election bannerElection banner
Published:Updated:

சமயோஜிதமாகச் செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்... பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள்!

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

மகளிர் தினத்தன்று இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், சமயோஜிதமாகச் செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நாடுகாணி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான அன்னபூரணி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸை உறவினர்கள் அழைத்துள்ளனர்.

 அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

உடனடியாக அன்னபூரணி வீட்டுக்கு 108 அவசர ஊர்தியுடன் வந்த ஊழியர்கள், கர்ப்பிணியைக் கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். மருத்துவமனை செல்வதற்கான கால அவகாசம் இல்லை என்பதை உணர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சமயோஜித முடிவை எடுத்து ஆம்புலன்ஸில் வைத்தே அவருக்குப் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில், மீண்டும் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதில் அவருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகளிர் தினத்தன்று இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், சமயோஜிதமாகச் செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிகிறது.

பிரசவம் பார்த்த மெடிக்கல் டெக்னீஷியன் யுகபாலனிடம்‌ பேசினோம். "6 மணிக்கு கால் வந்தது சார். நானும் பைலட் சுரேஸும் ஸ்பாட்டுக்கு போயிட்டோம். அவங்களுக்கு ட்வின்ஸ்னு தெரியாது.

இரட்டை பெண் குழந்தைகள்
இரட்டை பெண் குழந்தைகள்

ஆஷா வொர்க்கர் பெண்மனி சொல்லித்தான் தெரியும். ரொம்ப பெயின்ல இருந்தாங்க. அவரசமா வண்டியில ஏத்தி டெலிவரி பார்த்தோம். செகண்ட் பேபி, ஹாஸ்பிட்டல் ஸ்ட்ரச்சர்ல டெலிவரி ஆச்சு. டாக்டர்ங்க அட்வைஸ்படி டெலிவரி பாத்தோம். இப்போ மூணு பேருமே நல்லா இருக்காங்க" என்றார் மகிழ்ச்சியுடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு