Published:Updated:

கட்டுக்கடங்காத கோவிட் 19; முதல்வரிடம் இ-பாஸ் முறைக்கு அனுமதி கோரிய மாவட்ட ஆட்சியர்!

இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட
கலெக்டர்
இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட கலெக்டர்

இ-ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் நீலகிரிக்கு வரும் நபர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும், இ-பாஸ் முறையை அமல்படுத்த முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், மக்கள் அடர்த்தி குறைந்த நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோய் பாதிப்பை குறைக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது.

இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட
கலெக்டர்
இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட கலெக்டர்

மேலும் இ-ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் நீலகிரிக்கு வரும் நபர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, இதைக் குறைக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நீலகிரியைப் பொறுத்தவரை ஆக்சிஜன் பற்றாகுறை இல்லை. ஆக்சிஜன் செறிவூட்டிகள் தன்னார்வலர்கள் மூலம் கிடைக்கப்பெற்று வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கை வசதிகளும் போதுமான அளவு உள்ளது. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. கொரோனா முதல் அலையின்போது தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வௌியே வராமல் ஒத்துழைப்பு அளித்தனர்.

இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட
கலெக்டர்
இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட கலெக்டர்

ஆனால், இரண்டாவது அலை பாதிப்பு உள்ள நிலையில் பொதுமக்களின் ஒத்துைழைப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாகத் தற்போது அதிக பாதிப்பு உள்ள இடங்களில் பெரிய அளவிலான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறியதாக இதுவரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ள 3 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் பரிசோதனையில் கொரோனா அறிகுறிகளான 13 அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் மருத்துவக் குழுவினர் அங்கு சென்று பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட
கலெக்டர்
இ-பாஸ் நடைமுறைப்படுத்த அனுமதி கேட்ட கலெக்டர்

குறைவான மருத்துவ வசதிகள், காலிப் பணியிடங்கள் அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இ-பதிவு முறையால் அதிகமானோர் இங்கு வருவதாலும், தொற்று அதிகரிப்பு ஏற்படுகிறது. எனவே இ-பாஸ் முறையைக் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு