Published:Updated:

ரெட் அலர்ட்... நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழுவினர் - தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்!

தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்!

குந்தா, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மிக அதிக கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ரெட் அலர்ட்... நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழுவினர் - தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்!

குந்தா, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மிக அதிக கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் தென்மேற்குப் பருவமழை அதி தீவிரமடைந்தது. இடைவிடாமல் பலத்த காற்றுடன் பெய்த தொடர்மழை காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடிநீர், மின் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றுக்கான நீர் இருப்பு கணிசமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. ராட்சத மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும், மின் துண்டிப்பும் ஏற்பட்டன.

ஊட்டி
ஊட்டி

மீட்புக்குழுவினர் முறையாகக் கண்காணித்து உடனுக்குடன் சீரமைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இடங்களில் மக்கள் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பருவமழையின் தாக்கம் சற்றுக் குறைந்திருந்த நிலையில், வளி மண்டல சுழற்சி காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் குந்தா, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மிக அதிக கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரிக்கு வருகை தந்திருக்கின்றனர். மீட்பு முகாம்களும் தயார்நிலையில் இருக்கின்றன.

பேரிடர் மீட்புக் குழுவினர்
பேரிடர் மீட்புக் குழுவினர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரிகள், ``அடுத்த 24 மணி நேரத்துக்கு குந்தா, கூடலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் இருக்கிறது. ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவருகிறோம். ஒருவேளை மழை பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டால் அதையும் சமாளிக்கும் வகையில், தேசியப் பேரிடர் மீட்புக்குழுவிலிருந்து 44 வீரர்களை வரவழைத்திருக்கிறோம். மழையை எதிர்கொண்டு மக்களைப் பாதுகாக்க தயார்நிலையில் இருக்கிறோம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்... அச்சப்படத் தேவையில்லை" என்றனர்.