Published:Updated:

நீலகிரி ரெட் அலர்ட்: `3,000 பொறுப்பாளர்கள்... தயார்நிலையில் கட்டுப்பாட்டு மையங்கள்!'- ஆட்சியர் தகவல்

நீலகிரி ரெட் அலர்ட்

பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி ரெட் அலர்ட்: `3,000 பொறுப்பாளர்கள்... தயார்நிலையில் கட்டுப்பாட்டு மையங்கள்!'- ஆட்சியர் தகவல்

பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
நீலகிரி ரெட் அலர்ட்

வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக இரண்டாவது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் மழை எச்சரிக்கை விடப்பட்டு, இரண்டாவது நாளாக பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை நிலவரப்படி தேவாலாவில் 64 மில்லி மீட்டர் மழையும், ஊட்டியில் 50 மில்லி மீட்டர் மழையும் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது. பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டி
ஊட்டி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``மழை பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 50 பேர் வரவழைக்கப்பட்டு கூடலூர், குந்தா வட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப்படையினர் 34 பேர் ஊட்டியில் முகாமிட்டிருக்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நீலகிரியிலேயே இருந்து, மழை பாதிப்புகளைக் கண்காணித்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனடிப்படையில் அமைச்சர் நீலகிரியில் முகாமிட்டு மழை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிகள், மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை, நகராட்சிகள், பொது மற்றும் நீர்வள ஆதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியம், மருத்துவத்துறை ஆகியவை உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன. 68 ஜெனரேட்டர்கள், 18 ஜே.சி.பி இயந்திரங்கள், மரங்களை வெட்டி அகற்ற 124 வார்ஷாக்கள், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்ல 106 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் 283 பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஊட்டி
ஊட்டி

3,300-க்கும் அதிகமான முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் இருக்கின்றனர். பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்தும், அவசர உதவிகளுக்கும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதேபோல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுபாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி கோட்டம் 0423-2445577, குன்னூர் கோட்டம் 0423-2206002, கூடலூர் கோட்டம் 04262-261295, ஊட்டி வட்டம் 0423-2442433, குன்னூர் வட்டம் 0423-2206102, கோத்தகிரி வட்டம் 04266-271718, குந்தா வட்டம் 0423-2508123, கூடலூர் வட்டம் 04262-261252, பந்தலூர் வட்டம் 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.