Published:Updated:

நீலகிரி: காயம்பட்ட காட்டுமாட்டைத் தாக்கிய இளைஞர் - கொதிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்!

காட்டுமாட்டைத் தாக்கிய இளைஞர்
News
காட்டுமாட்டைத் தாக்கிய இளைஞர்

அந்தக் காட்டுமாட்டை விரட்ட, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தடியைக்கொண்டு அதைத் தாக்கியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்துவருகின்றன. தற்போது தேயிலைத் தோட்டங்களிலும் கட்டடங்கள் முளைத்துவருவதால், உணவு, தண்ணீர் தேடிக் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி இடம் பெயரவேண்டிய கட்டாயத்துக்கு வனவிலங்குகள் தள்ளப்பட்டிருக்கின்றன. காட்டுமாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் தென்படுவது வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. இப்படி வரும் வனவிலங்குகளால், மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல் ஏற்படுவதும் அதிகரித்திருக்கின்றன.

காட்டுமாட்டைத் தாக்கிய இளைஞர்
காட்டுமாட்டைத் தாக்கிய இளைஞர்

இந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயத்துடன் காட்டுமாடு ஒன்று குன்னூர் அருகிலிருக்கும் கேத்தி பகுதி சாலையோரங்களில் உலவிவந்தது. அந்தக் காட்டுமாட்டை விரட்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தடியைக்கொண்டு அதைத் தாக்கியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த நபர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த இளைஞரைக் கைதுசெய்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``குடியிருப்புப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் என அனைத்து கிராம மக்களையும் அறிவுறுத்தியிருக்கிறோம்.

காயத்துடன் காட்டுமாடு
காயத்துடன் காட்டுமாடு

ஆனால், கேத்தி பகுதியில் காயத்துடன் உலவிய காட்டுமாட்டை ராஜேந்திரன் என்ற இளைஞர் அருகில் சென்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அவர் மதுபோதையிலிருந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என விசாரித்துவருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.