Published:Updated:

ஊட்டி: `சுழன்றடிக்கும் காற்று; பெயர்ந்து விழுந்த மரங்கள்!’ - கலங்கும் மக்கள்

Heavy rains uprooted hundreds of trees across the Nilgiris.
Heavy rains uprooted hundreds of trees across the Nilgiris. ( K.Arun )

நீலகிரியில் பலத்த சூரைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் நூற்றுக்கணக்கான மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. மரம் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு, இருவர் காயம்.

நீலகிரியில் நான்காவது நாளாக இடைவிடாது பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 2,241மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Heavy rains uprooted hundreds of trees across the Nilgiris.
Heavy rains uprooted hundreds of trees across the Nilgiris.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

மேலும், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் ஊட்டி, குந்தா, கூடலூர் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள், குடியிருப்புகள், சாலையின் குறுக்கே எனப் பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன.

Fire and rescue service personnel clear roads.
Fire and rescue service personnel clear roads.

ஊட்டி அருகில் உள்ள சோலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ரவி என்பவர் தனது தோட்டத்தைப் பார்க்க வெளியில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

அதேபோல் ஊட்டி ஆர்.சி.காலனி பகுதியைச் சேர்ந்த 40 வயதான சாதிக் அலி என்பவர் விறகு சேகரிக்கச் சென்றபோது அருகில் இருந்த மரம் விழுந்ததில் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Fire and rescue service personnel clear roads.
Fire and rescue service personnel clear roads.

இதே போல் மரம் விழுந்ததில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விழும் மரங்களை உடனுக்குடன் மீட்புக் குழுவினர் அகற்றினாலும் தொடர்ந்து மரங்கள் விழுந்த வண்ணமே உள்ளன.

மக்களின் பாதுகாப்பு குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தனது அறிவிப்பில்,``நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பொழிவு மற்றும் காற்று வீசுவதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும். மேலும் குடியிருப்பு அருகில் அபாயகரமான மரங்கள் இருந்தால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக அருகியல் உள்ள முகாம்களுக்குச் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Heavy winds threaten to uproot roadside trees.
Heavy winds threaten to uproot roadside trees.

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் இம்மானுவேல், ``200 வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து இடைவிடாது மரங்களை அகற்றி வருகிறோம். மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. பொது மக்கள் மரங்கள் அருகில் நிற்கவே, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு