Published:Updated:

`காற்றில் பரவும் வைரஸைப் பொசுக்க உருவாக்கினோம்!’ - எலெக்ட்ரானிக் மாஸ்க் வடிவமைத்த பேராசிரிய தம்பதி

fire wall mask
fire wall mask

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மொத்த உலகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தொழில்நுட்பவியல் பிரிவு பேராசிரிய தம்பதி தங்களின் பங்களிப்பாக எலெக்ட்ரானிக் மாஸ்க் வடிவமைத்து நம்பிக்கையளித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராமகிருஷ்ணன் - கனகலதா தம்பதியர் வசித்து வருகின்றனர். ராணுவ அதிகாரியாக 25 ஆண்டுக்காலம் பணியாற்றிய ராமகிருஷ்ணன், கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனகலதாவும் இவர் பணியாற்றும் அதே தொழில்நுட்பப் பிரிவில் பேராசிரியையாக உள்ளார்.

fire wall mask
fire wall mask

கனடாவில் நிலவும் கடுமையான உறைபனிக் காலத்தைக் கழிக்க முடியாமல் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்துப் போக்குவரத்து சேவையும்‌ முடக்கப்பட்டுள்ளதால் பனிக்காலம் முடிந்தும் அவர்களால் கனடா திரும்ப முடியவில்லை.

லாக்டெளனில் இருக்கும் இந்த 70 வயதைக் கடந்த தம்பதி தாங்கள் கற்றுத் தேர்ந்த எலெக்ட்ரானிக்துறை மூலம் கொரோனாவுக்கு எதிராக எப்படிப் பயன்படுத்துவது என சிந்தித்திருக்கிறார்கள். அதன் விளைவாகக் காற்றில் பரவும் வைரஸைப் பொசுக்கி 100 சதவிகித பாதுகாப்பான காற்றை வடிகட்டும் எலெக்ட்ரானிக் மாஸ்க்கை வடிவமைத்துள்ளனர்.

fire wall mask
fire wall mask

இந்த சிறப்பு முகக்கவசம் குறித்து வடிவமைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ``இந்த முகக்கவசம் மிகவும் பாதுகாப்பானது. லித்தியம் பேட்டரி மூலம் ஹைவால்டேஜ் திறனுடன் செயல்பட்டு சுவாசக் காற்றில் பரவ இருக்கும் நுண்ணுயிரையையும் பொசுக்கும் தன்மை கொண்டது. இந்த மாஸ் தயாரிக்க 4,000 ரூபாய் வரை செலவாகும். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் பயன்படுத்தலாம்’’ என்றார்.

மாஸ்க் வடிவமைப்புக்கு உதவிய பேராசிரியை கனகலதா, ``இருவருமே எலெக்ட்ரானிக் துறை பேராசிரியர்கள் என்பதால் இணைந்தே வடிவமைத்தோம். காற்றில் பரவும் வைரஸை ஹைவால்டேஜ் ஃபயர் வால் மூலம் பொசுக்கும் வகையில் உருவாக்கினோம்.

fire wall mask
fire wall mask

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள் மேலும் விமானிகள், ரயில் இயக்குவோர் போன்ற பலருக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு