Published:Updated:

மீண்டும் திறக்கப்படும் சுற்றுலாத் தளங்கள்; தளர்வுகளால் புத்துணர்ச்சி பெறும் சுற்றுலாத்துறை!

தளர்வுக்குப் பின் தற்போது ஊட்டி‌யை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. பயணிகளை கவரும் வகையில் சர்வதேச சுற்றுலா தினம் உற்சாகமாக ஊட்டியில் நேற்று நடத்தப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா காரணமாக இரண்டாவது ஆண்டாக முடங்கிக் கிடந்த சுற்றுலாத்துறைக்கு அரசு அளித்து வரும் தற்போதைய தளர்வுகள் மெள்ள புத்துயிர் பாய்ச்சும் விதமாக அமைந்திருக்கின்றன. சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீசன் கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

சுற்றுலா தின கொண்டாட்டம்
சுற்றுலா தின கொண்டாட்டம்
125 நாள்களுக்குப்‌ பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்; மகிழ்ச்சியில் பயணிகள், சிறு வியாபாரிகள்!

தளர்வுக்குப் பின் தற்போது ஊட்டி‌யை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. பயணிகளை கவரும் வகையில் சர்வதேச சுற்றுலா தினம் உற்சாகமாக ஊட்டியில் நேற்று நடத்தப்பட்டது.

வருடந்தோறும் செப்டம்பா் 27-ம் தேதியை உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், `சமூக வளர்ச்சிக்கு சுற்றுலா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடியினத்தைச‌ச் சேர்ந்த தோடர், கோத்தர் பழங்குடி மக்களின் பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இது தவிர ‌படுகர் சமுதாய மக்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த நடனங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

சுற்றுலா தின கொண்டாட்டம்
சுற்றுலா தின கொண்டாட்டம்

இதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை சார்பில் பாரம்பர்ய உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதில் பாரம்பர்ய தானிய வகைகள், உடலுக்கு நன்மை தரும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த உணவு பொருள்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றுலாப் பயணிகளிடையே நடந்த படகு போட்டிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். படகு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுற்றுலா தின கொண்டாட்டம்
சுற்றுலா தின கொண்டாட்டம்
கொடநாடு காட்சிமுனை: அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள்; கண்டுகொள்ளாத வனத்துறை!

சுற்றுலா குறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்கு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றன. பயணிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பாதுகாப்பான முறையில் சுற்றுலாவை கண்டுகளிக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு