Published:Updated:

நிபா வைரஸ்: `காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், திருப்பி அனுப்பப்படுவார்கள்!’ - நீலகிரி ஆட்சியர்

நீலகிரி = நிபா வைரஸ்
நீலகிரி = நிபா வைரஸ்

கேரள மக்களைக் கலங்கடித்துவரும் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகள் எல்லையோர மாவட்டமான நீலகிரியில் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், சிறுவனிடம் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்துவருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

வௌவால்
வௌவால்

நிபா மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நிபா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்டத்தில் முழுவீச்சில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று தாக்கம் இருப்பதால், அருகிலுள்ள மாவட்டமான நமது மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் முழுவீச்சில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக - கேரள சாலைகளில் 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்புக் குழு

மேலும் நிமோனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டுவருபவர்கள் சோதனைச்சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவருகிறார்கள். கேரள மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கட்டாயம் கொரோனா இல்லை என ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இன்னசென்ட் திவ்யா
இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் 98 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாள்களில் மீதமுள்ள பொதுமக்களும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முதல் தவணை தடுப்பூசி 100 சதவிகிதம் செலுத்தப்பட்ட மாவட்டமாக மாறும். இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு