Published:Updated:

`மதுரை ஆதீனமாகப் பதவியேற்றுவிட்டேன்; ஆன்லைனில் ஆசி வழங்குவேன்!' - அதிரவைக்கும் நித்யானந்தா

நித்யானந்தா

புதிய ஆதீனம் 23-ம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு மதுரை ஆதீன மட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`மதுரை ஆதீனமாகப் பதவியேற்றுவிட்டேன்; ஆன்லைனில் ஆசி வழங்குவேன்!' - அதிரவைக்கும் நித்யானந்தா

புதிய ஆதீனம் 23-ம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு மதுரை ஆதீன மட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
நித்யானந்தா

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்தாலும், ஆதீன மடத்தைச் சுற்றும் மர்மங்களாலும், தொடர்ந்து நித்யானந்தா விடும் அறிவிப்பாலும் ஆதீன பக்தர்கள் கவலையடைந்திருக்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் தோற்றுவித்த 1,500 ஆண்டு பாரம்பர்யமுள்ள மதுரை ஆதீன மடத்தில் 292-வது ஆதீனமாக 1980-ல் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் மடாதிபதியாக விளங்கிய அருணகிரிநாதர், உடல்நலக் குறைவால் கடந்த 13-ம் தேதி காலமானார்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

சைவமும் தமிழும் இரண்டு கண்கள் என ஆன்மிகப்பணி செய்த மதுரை ஆதீனம், அரசியல் பணியும் செய்தார். ஆரம்பகாலங்களில் தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளில் அழுத்தமாகக் குரல் கொடுத்தார். இலங்கை அரசால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைக் கண்டித்து ஈழ ஆதரவு போராட்டங்களில் கலந்துகொண்டார். இந்தியை எதிர்த்தார்.

அனைத்துச் சாதி, மதத்தினருடன் இணக்கமாக இருந்தார். பிற மத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திராவிட இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்களால் கொண்டாடப்பட்டார்.

அரசியல்வாதிகள், கலைத்துறையினருடன் நெருக்கமாக இருந்தார். இந்த அளவுக்குப் பரபரப்பாக எந்த மடாதிபதியும் இருந்ததில்லை. அதேபோல் அவரைப்போல் சர்ச்சைகளையும் சந்தித்ததில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சைவத்தையும் தமிழையும் வளர்க்க மன்னர்களும், செல்வந்தர்களும் மதுரை ஆதீனத்துக்குக் கொடுத்த ஏராளமான சொத்துகளை, வாடகை, குத்தகை என்ற பெயரில் பல இடங்களில் யார் யாரோ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயரீதியாக அவருக்கு நெருக்கமாகக் காட்டிக்கொண்டு பலர் பலனடைந்திருக்கிறார்கள்.

அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவானவராக இருந்த ஆதீனம் அருணகிரிநாதர், 91-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு எம்.நடராஜனோடு நெருக்கமானார். கஞ்சா வழக்கில் நடராஜனுக்குத் தெரிந்த செரீனா கைதுசெய்யப்பட்டபோது அந்தப் பிரச்னையில் ஆதீனம் பெயரும் சர்ச்சைக்குள்ளானது.

நித்யானந்தா
நித்யானந்தா

``இந்தநிலையில்தான் 2004-ல் சேலத்தைச் சேர்ந்த பரணிதரன் என்ற சிறுவனை இளைய ஆதீனமாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் பிறகு அந்தச் சிறுவன் எந்தக் காரணமும் சொல்லாமல் மடத்தைவிட்டு அனுப்பப்பட்டான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து 2012-ல் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக அறிவிக்க, பல்வேறு அமைப்புகள் மதுரை ஆதீனத்துக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தன. ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் நித்யானந்தா சீடர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் இளைய ஆதீன அறிவிப்பைத் திரும்பப் பெற்றார் அருணகிரிநாதர்.

இந்தநிலையில், தான்தான் இளைய ஆதீனம் என்று நித்யானந்தாவும், அதை ரத்து செய்து ஆதீனமும் தாக்கல் செய்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மதுரையில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், பல மாவட்டங்களிலுமுள்ள சொத்துகள் பலபேருக்குக் குத்தகைக்கு மிகக் குறைந்த தொகைக்குக் கொடுக்கப்பட்டு, அதிலும் பல பிரச்னைகள் இருந்துவரும் நிலையில், கடந்த வாரம் ஆதீனம் சீரியஸ் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் தெரிந்ததும் மதுரைக்கு விரைந்து வந்த தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மடத்திலுள்ள அருணகிரிநாதரின் அறை, ஆவணங்கள், முக்கியப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சீல் வைக்க உத்தரவிட்டார்கள். iஇந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 13-ம் தேதி ஆதீனம் அருணகிரிநாதர் மரணமடைந்தார்.

சமீபகாலமாக ஆதீனம் சம்பந்தமாகச் சத்தமில்லாமல் இருந்த நித்யானந்தா, ஆதீனத்தின் மறைவுச் செய்தி பரவியவுடன் உருக்கமாகப் பேசி, தன் சீடர்கள் துக்கம் அனுஷ்டிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். அவர் இங்கு வர வாய்ப்பில்லை என்பதால் ஆதீன நிர்வாகிகள் நிம்மதியாக இருக்கிறார்கள். வருகின்ற 23-ம் தேதி இளைய ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆதீனமாக முறைப்படி பொறுப்பேற்கும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில் நித்யானந்தா, சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. ``மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக நான் பதவி ஏற்றுவிட்டேன். இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவிருக்கிறேன். எனது பெயரை 293 –வது ஜெகத்குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் என மாற்றிக்கொண்டிருக்கிறேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

நித்யானந்தா
நித்யானந்தா

புதிய ஆதீனம் 23-ம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு மதுரை ஆதீன மட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``பல மோசடி வழக்குகளில் நம் நாட்டு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தாவை நாங்கள் பொருட்படுத்தவில்லை, அவரால் நம் நாட்டுக்கே வர முடியாது’’ என்கிறார்கள் மதுரை ஆதீன மடத்தைச் சேர்ந்தவர்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...