Published:Updated:

`உதவி வேண்டுமா... உதவ விருப்பமா?’ - விகடனோடு இணையுங்கள் #NivarVikatanHelp

நிவர் புயல்
நிவர் புயல்

நிவர் புயல்: இந்த ஆபத்தான காலகட்டத்தில் உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைக்கும் பணியையும் விகடன் முன்னெடுக்கிறது.

கரம்கோப்போம் வாருங்கள்!


தானே, வர்தா, ஒகி, கஜா எனப் பெரும் புயல் காலங்களிலும் மக்களோடு மக்களாக நின்று மக்களின் குறைகளைத் தீர்த்துவருகிறது விகடன். அந்த வகையில் இந்த நிவர் புயல் நேரத்திலும் மக்களுக்கு உதவ, களத்தில் நின்றுகொண்டிருக்கிறது விகடன். உங்களுக்கோ, உங்கள் சுற்றாத்தாருக்கோ... இந்தப் புயல் நேரத்தில் உதவி தேவைப்படுபவர்களைத் தெரியப்படுத்துங்கள்; உதவக் காத்திருக்கிறோம். விகடனோடு இணைந்து உதவிசெய்ய விரும்புபவர்களையும் வரவேற்கிறோம்.

நிவர் புயல் பாதிப்பு நேரத்தில், நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியமாகிறது. இந்த ஆபத்தான காலகட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக #NivarVikatanHelp என்ற ஹேஷ்டேகுடன் `விகடனை’ மென்ஷன் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அதை உடனடியாக எடுத்துச் செல்கிறோம்.

நிவர் புயல்
நிவர் புயல்

இந்த ஆபத்தான காலகட்டத்தில் உதவி தேவைப்படுபவர்களையும் உதவி செய்பவர்களையும் இணைக்கும் பணியையும் விகடன் முன்னெடுக்கிறது. உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா... என்னவிதமான உதவி தேவை என்பதையும், உங்களைத் தொடர்புகொள்ள உங்களைப் பற்றிய விவரங்களையும் கீழே பதிவு செய்யுங்கள்.

பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உங்களுக்குத் தேவையான உதவியைப் பதிவு செய்யுங்கள்.

https://bit.ly/NivarVikatan

இதோடு உதவி தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் உதவ விரும்புகிறீர்களா? உங்களை நாங்கள் தொடர்புகொள்வதற்காக உங்களைப் பற்றிய விவரங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யுங்கள். https://bit.ly/NivarVikatanVolunteers


கரம் கோப்போம் வாருங்கள்...

அடுத்த கட்டுரைக்கு