Published:Updated:

நோ சி.ஏ.ஏ, நோ என்.ஆர்.சி! - கோவை மக்களின் நூதன போராட்டம்

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

கோவையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களின் வீட்டுச் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகிவற்றுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கோவையிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

முக்கியமாக, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகப் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக கோவையில் நேற்று பேரணி நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

`தமிழகத்தில் நாளை சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்!'- அரசியல் கட்சிகள் ஆதரவு

ஏற்கெனவெ, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு வீட்டின் முன்பு கோலம் போட்டு நூதனமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதற்காக, சென்னையில் சில பெண்கள் கைதும் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அந்த கோல வடிவம் தற்போது கோவையில் வீட்டுச் சுவர்களுக்கு மாறியுள்ளது.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

கோவையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சாரமேடு, கரும்புக்கடை, உக்கடம் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள வீட்டுச் சுவர்களில், NO CAA, NO NRC, NO NPR போன்ற வாசகங்கள் ஸ்க்ரீன் பிரின்ட் எடுத்து ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகிவருகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிவற்றை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை நாங்கள் பல்வேறு வழிகளில் போராடிக்கொண்டேதான் இருப்போம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு