Published:Updated:

`யாராலும் தொடக்கூட முடியல..!’- அலங்காநல்லூரிலும் அதிர வைத்த இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை

இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை
இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை

ஒரு மணி நேரத்துக்கு 75 வீரர்கள் என்ற கணக்கில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்கள் பங்கேற்றுவரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகள் யாராலும் பிடிக்கப்படவில்லை.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் இன்று களம் இறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டை நேரில் கண்டு களிக்க உள்நாட்டு, வெளிநாட்டு ரசிகர்கள் திரண்டு வந்துள்ளதால் அலங்காநல்லூர் நகரமே குலுங்கிக்கொண்டிருக்கிறது.

`யாராலும் தொடக்கூட முடியல..!’- அலங்காநல்லூரிலும் அதிர வைத்த இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி மாணிக்கம் தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் குழு நிர்வாகிகள் முன்னிலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அவனியாபுரத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு! - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

ஒரு மணி நேரத்துக்கு 75 வீரர்கள் என்ற கணக்கில் ஜல்லிக்கட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்றுவரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகள் யாராலும் பிடிக்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளையையும் யாராலும் தொட முடியவில்லை. நீண்ட நேரம் மைதானத்தில் நின்று விளையாடி அனைவரையும் ஈர்த்த இக்காளை, கடந்த 15-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் 9 நிமிடம் களத்தில் நின்று விளையாடியது. அதிலும் யாராலும் பிடிக்க முடியாததால் பரிசு பெற்றது.

இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை
இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை

இன்றைய போட்டியில் அதிக மாடு பிடிக்கும் வீரர்களுக்கும், சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பெயரால் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார், பைக் போன்ற பரிசுகளை வழங்க உள்ளார். அலங்காநல்லூரில், தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

வாடிவாசலுக்குப் பின் வரிசைகட்டி நிற்கும் காளைகள்... பாலமேடு ஜல்லிக்கட்டு (படங்கள்)

அலங்காநல்லூர் `அசுரன்' தன்னைப் பிடிக்கவந்த வீரர்களை நாலாபுறமும் சுற்றி சுற்றி விரட்டிய காளை வீடியோ: என்.ஜி.மணிகண்டன்

Posted by Vikatan EMagazine on Friday, January 17, 2020
பின் செல்ல