Published:Updated:

நித்தியானந்தா: சிஷ்யைக்குப் பாலியல் தொல்லை... ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்!

நித்தியானந்தா

சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நித்தியானந்தா: சிஷ்யைக்குப் பாலியல் தொல்லை... ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்!

சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
நித்தியானந்தா

கர்நாடக மாநிலம், ராம நகர் மாவட்டம், பிடரியில் நித்தியானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் ஒன்று இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் இருந்த பெண் சிஷ்யைக்கு நித்தியானந்தா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர்மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. நித்தியானந்தாவின் முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு விசாரணை ராம நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

 நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராமநகர் மாவட்ட நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அவர் கைதுசெய்யப்படுவாரா இல்லையா என்பது குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

நித்தியானந்தா நாட்டைவிட்டு வெளியேறி கைலாசா என்று அழைக்கப்படும் நாட்டை உருவாக்கி தனது ஆசிரமத்தை நிறுவி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வப்போது தன் சிஷ்யர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.