Published:Updated:

கோவை: குப்பையைத் தரம் பிரித்துக் கொட்டுவதில் தகராறு; பெண் தூய்மைப் பணியாளரைத் தாக்கிய வடமாநில இளைஞர்

தாக்குதல்
News
தாக்குதல்

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளரை வடமாநில இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை ரங்ககவுண்டர்வீதி பகுதியில், இன்று காலை ஜோதியம்மாள் (51) என்ற தூய்மைப் பணியாளர் குப்பை சேரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். அது வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது வினோத் என்ற வட இந்தியர், தனது வீட்டுக் குப்பைகளில் குட்கா, பிளாஸ்டிக் கவர்களை மக்கும் குப்பையில் கொட்டியிருக்கிறார். இதையடுத்து, ஜோதியம்மாள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொட்டுமாறு வினோத்திடம் கூறியிருக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த வினோத், ஜோதியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வினோத், ஜோதியம்மாளை குப்பைத் தொட்டியாலும், டீ, காபி ஃபிளாஸ்க்காலும் தாக்கியிருக்கிறார்.

ஜோதியம்மாள்
ஜோதியம்மாள்

இதில் கண் அருகே காயம் ஏற்பட்டு ஜோதியம்மாளுக்கு ரத்தம் கொட்டியது. அதையடுத்து, அருகிலிருந்த சக தூய்மைப் பணியாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்தப் பகுதியிலிருக்கும் வட மாநில மக்கள் எங்களைத் தொடர்ந்து தரக்குறைவாக நடத்துகின்றனர்” என்று கூறி, தூய்மைப் பணியாளர்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றனர்.

ஆணையர் ராஜகோபால் சுன்கரா
ஆணையர் ராஜகோபால் சுன்கரா

இதற்கிடையே காயமடைந்த தூய்மைப் பணியாளர் ஜோதியம்மாளை, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வினோத் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.