Published:Updated:

`6 முறை விண்ணப்பித்தும் அனுமதி இல்லை!’ - ராமநாதபுரத்தில் தவிக்கும் வடகிழக்கு மாநில மாணவர்கள்

லாக்டௌன்
லாக்டௌன்

சக மாணவரான அருண்பிரசாத் என்பவரின் உதவியுடன் நரிக்குடி கிராமத்தில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கமுதி அருகே உள்ள பள்ளப்பச்சேரியில் உள்ள தன் தாத்தா வீட்டில் தங்கவைத்துள்ளார் அருண்பிரசாத்.

அரசு இணையதளம் மூலம் 6 முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் வெளிமாநில மாணவர்கள் 3 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்
உ.பாண்டி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பஸ், ரயில், விமானம் என அனைத்து பொது போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சென்ற பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கோ, சொந்த மாநிலத்துக்கோ திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

ஊரடங்கு நீடிக்கும் நிலை உள்ளதால் விரைவாக சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும்.
வெளிமாநில மாணவர்கள்

அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் இருவர் மற்றும் ஒரு மாணவி உள்ளிட்ட மூவரும் பெங்களூர் ஸ்வைசா யோகா மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். ஸ்டடி லீவில் மதுரையைச் சேர்ந்த மாணவ நண்பருடன் கடந்த மார்ச் மாத இறுதியில் மதுரை வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அஸ்ஸாம் மாநில மாணவர் நவதீபோரா, அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் கோலம்நைதீர், மாணவி டாசோ யாம் ஆகிய மூவரும் தென்காசி மற்றும் குற்றாலத்துக்குச் சென்றுவிட்டு மார்ச் 25-ல் சொந்த ஊர் திரும்ப மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவால் விமானம் ரத்து செய்யப்பட்டதால், இவர்கள் மூவரும் சொந்த மாநிலம் திரும்ப முடியவில்லை.

இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சேர்ந்த சக மாணவரான அருண்பிரசாத் என்பவரின் உதவியுடன் நரிக்குடி கிராமத்தில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கமுதி அருகே உள்ள பள்ளப்பச்சேரியில் உள்ள தன் தாத்தா வீட்டில் தங்கவைத்துள்ளார் அருண்பிரசாத். இதனிடையே, சொந்த ஊர் திரும்புவதற்காக வெளிமாநில மாணவர்கள் மூவரும் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். 6 முறை இணையதளம் மூலம் விண்ணப்பித்தும் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்
உ.பாண்டி

இதனால் சுமார் 50 நாள்களுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான பள்ளப்பச்சேரியில் தங்கியுள்ள மாணவர்கள் மூவரும் அடிப்படை வசதிகள் இன்றியும் கைச்செலவுக்கு வழியின்றியும் இருந்து வருகின்றனர். இதையறிந்த உடையநாதபுரம் ஊராட்சித் தலைவர் கதிர்வேல், துணைத் தலைவர் ஆண்டி, ஒன்றிய கவுன்சிலர் கனக அரசி ஆகியோர் தங்களால் இயன்ற உதவிகளை மூன்று மாணவர்களுக்கும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வரும் 17-ம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு நீடிக்கப்படும் நிலை உள்ளதால் தாங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் மூவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு