Published:Updated:

`அறிகுறி இருந்த மூவருக்கு பாசிட்டிவ்!' -தமிழகத்தில் 6 ஆக அதிகரித்த எண்ணிக்கை #Corona

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 283-ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதனால் பல மாநிலங்களில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாளை, நாடு முழுவதும் ஜனதா ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இதற்கிடையில், தமிழகம் உட்பட பிற மாநிலங்களிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 60 பேருக்கும் கேரளாவில் 33 பேருக்கும் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் முறையே 25, 23 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 3 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 6 ஆக அதிகரித்துள்ளது.

`பயணங்களைத் தவிருங்கள் ப்ளீஸ்!’ -பொதுமக்களுக்கு விஜயபாஸ்கர் வேண்டுகோள்

முன்னதாக இருந்த மூன்று பேரில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். வட மாநிலத்திலிருந்து வந்தவரும், அயர்லாந்திலிருந்து தமிழகம் வந்த இரண்டு பேரும் இதுவரை சிகிச்சைபெற்று வந்தநிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த இருவர் மற்றும் நியூஸிலாந்திலிருந்து வந்த ஒருவர் என மூவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஆறு வைரஸ் நோயாளிகளும் வேறு இடங்களிலிருந்து தமிழகம் வந்த பயண வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள், ஏற்கெனவே வைரஸ் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதையடுத்து தமிழக எல்லைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு