Published:Updated:

`கடுமையான பணிச்சுமை; விஐபி நபர்கள்!' -ஓமந்தூரார் மருத்துவமனை செவிலியர் போராட்டத்துக்கு என்ன காரணம்?

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி

கொரோனாவுக்கு எதிரான யுத்ததில் போதுமான அளவில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பது அவசியம். அதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மருத்துவப் பணியாளர்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், கடுமையான பணிச்சுமை காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செவிலியர்கள்
செவிலியர்கள்
மாதிரிப்படம்

இந்த நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் என்ன நடக்கிறது என மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது சிலர், ``இந்த மருத்துவமனையில் குறைந்தது 400 படுக்கைகள் இருக்கின்றன. ஆனால். செவிலியர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில்தான் இருக்கிறது. அவர்களுக்கு முறையான ஓய்வும் வழங்கப்படுவதில்லை. தொடர்ச்சியான ஷிப்டுகளால் அவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 நோயாளிகளுக்கு 20 முதல் 23 செவிலியர்கள்தான் பணியில் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. செவிலியர்களுக்கும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும். அப்போது யாருக்காவது கொரோனா பாசிட்டிவ் தகவல் வந்தால் அது மற்றவர்களையும் பாதிக்கும். இதுதான் தற்போது சென்னையில் சிக்கலாக இருக்கிறது.

`ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 31 மருத்துவப்  பணியாளர்களுக்கு கொரோனா!' -சென்னையில் தொடரும் அதிர்ச்சி

அதிலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரும் வி.ஐ.பி ஆக உள்ளார்கள். அரசியல்வாதிகள் அல்லது அவர்களுக்கு நெருக்கமான நபர்களாக இருக்கிறார்கள். இதனால், செவிலியர்கள், மீண்டும் மீண்டும் அவர்களைக் கவனிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கொரோனா நோயாளிகளைப் பொறுத்தவரை அவ்வப்போது அவர்களைக் கண்காணித்தாலே போதுமானது. ஆனால் வி.ஐ.பி என்கிறபோது, அழுத்தம் காரணமாக மீண்டும் மீண்டும் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நிலை வருகிறது. இதனால் பணிச்சுமை மிக அதிகமாக இருக்கிறது. அதனால்தான் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்" என்றார்.

கொரோனா
கொரோனா

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1,239 மருத்துவர்கள் உட்பட 2,834 மருத்துவப் பணியாளர்களைப் பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். `கொரோனாவுக்கு எதிரான யுத்ததில் போதுமான அளவில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பது அவசியம். அதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு