Published:Updated:

`சளி, காய்ச்சல்!’ - கரூரில் உ.பி-யைச் சேர்ந்த 40 ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

புகளூர் காகித ஆலை
புகளூர் காகித ஆலை ( நா.ராஜமுருகன் )

`கடந்த சில மாதங்களாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள் புகளூர் காகித ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர், புதிதாக எத்தனை பேர் வேலை பார்த்து வருகின்றனர்' என்று விசாரித்தனர்.

கரூரில் இயங்கி வரும் டி.என்.பி.எல் ஆலையில் பணியாற்றி வரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்களில் சிலருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்குத் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புகளூர் காகித ஆலை
புகளூர் காகித ஆலை
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், புகளூரில் இயங்கி வருகிறது, தமிழக அரசுக்குச் சொந்தமான காகித ஆலை நிறுவனம். இந்த நிறுவனத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் கொட்டகை அமைத்து காகித ஆலையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு - சொந்த ஊருக்கு டூவீலரில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

இந்த நிலையில், நேற்று இந்த 40 தொழிலாளர்களும் காகித ஆலைக்கு வேலை நிமித்தமாக வந்தனர். அப்போது அவர்களில் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி ஆகிய பிரச்னைகள் இருந்ததை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனால், வேலைக்காக அவர்களை காவலர்கள் காகித ஆலையின் உள்ளே அனுமதிக்கவில்லை.

புகளூர் காகித ஆலை
புகளூர் காகித ஆலை
நா.ராஜமுருகன்

இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள், அங்கு விரைந்து வந்தனர். சளி, இருமலோடு இருந்த தொழிலாளர்களை மட்டும், சிகிச்சைக்காக கரூர் நொய்யல் பகுதியில் உள்ள ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொழிலாளர்களுக்கு திவீரமாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளும் மருத்துவர்கள் வழங்கினர். பின்னர் அவர்களை அனுப்பிவிட்டனர். அவர்களைக் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல், அவர்கள் குடியிருக்கும் கொட்டகைக்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், புகளூர் காகித ஆலைக்கு விரைந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள் புகளூர் காகித ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர், புதிதாக எத்தனை பேர் வேலை பார்த்து வருகின்றனர் என்று விசாரித்தனர். அதோடு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் யார், யார் எல்லாம் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வந்தனர் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

புகளூர் காகித ஆலை
புகளூர் காகித ஆலை
நா.ராஜமுருகன்

அதோடு, ஊரடங்கு உத்தரவு முடியும்வரை சொந்த ஊருக்கோ, வேறு பகுதிகளுக்கோ செல்ல முயல கூடாது என்று எச்சரித்தனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா சம்பந்தமாக நடத்தப்பட்ட சோதனை அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு