Published:Updated:

’பெருமாத்தாள் எனும் நான்..’ - ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற 90 வயது பாட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாத்தாள் பாட்டி
ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாத்தாள் பாட்டி

பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வாகியுள்ள 90 வயது பெருமாத்தாள் பாட்டி, கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று உறுதியளித்தார். தென்காசி மாவட்டத்தில் 22 வயது பொறியாளர் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் விடுபட்டு 9 மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல படித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். அவர்களில் பலரும் வெற்றியைக் கைப்பற்றினர்.

பொறுப்பேற்ற பெருமாத்தாள் பாட்டி
பொறுப்பேற்ற பெருமாத்தாள் பாட்டி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 90 வயது நிரம்பிய பெருமாத்தாள் பாட்டி வெற்றி பெற்றிருந்தார். அவர் இன்று ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கிராம மக்கள் உற்சாகத்துடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழகத்திலேயே அதிக வயதுடைய பெருமாத்தாள் பாட்டி பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, “ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெருமாத்தாள் எனும் நான்..” என்று அவர் பொறுப்பேற்றபோது குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொறுப்பேற்பு
பொறுப்பேற்பு

பொறுப்பேற்றுக் கொண்ட பெருமாத்தாள் பாட்டி கூறுகையில், “இந்த கிராமத்து மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்களின் தேவைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் வந்து சந்தித்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். மக்களின் தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்” என்றார் உற்சாகமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக ஸாருகலா என்ற 22 வயது முதுநிலை பொறியியல் பட்டதாரி மாணவி போட்டியிட்டார். அவருக்குப் பொதுமக்கள் அளித்த ஆதரவின் காரணமாகப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வானார்.

பொறியியல் மாணவி ஸாருகலா பொறுப்பேற்பு
பொறியியல் மாணவி ஸாருகலா பொறுப்பேற்பு

முதுநிலை பொறியியல் படிக்கும் மாணவியான ஸாருகலா ஊராட்சி மன்றத் தலைவராக இன்று வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்குக் கிராமத்தில் உள்ள பொதுமக்களும் குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். ’கிராமத்தின் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி உடனுக்குடன் நிறைவேற்றுவேன்’ என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு