Published:Updated:

`ஏலம் எடுத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்!' - கரூரில் 33,000 ரூபாய்க்கு விலைபோன 1 கிலோ உப்பு

இந்த நோன்பில் வைத்து வழிபடும் பொருள்களை ஏலம் விடுவது வழக்கம். ஏனென்றால், இந்த மங்களப் பொருள்களை ஏலம் எடுத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.

பிள்ளையார் நோன்பு
பிள்ளையார் நோன்பு

கரூரில் நடந்த விழாவில் 1 கிலோ உப்பு ரூ. 33,000 ரூபாய்க்கும் ஒரு மாலை ரூ.16,000 ரூபாய்க்கும் ஏலம்போன சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஏலம் விடும் மேலை பழநியப்பன்
ஏலம் விடும் மேலை பழநியப்பன்

கரூரில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவாகப் பிள்ளையார் நோன்பு விழாவைக் கொண்டாடினர்.

Vikatan

இந்த விழா கடந்த 32 வருடங்களாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி, கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 பிள்ளையார் நோன்பு
பிள்ளையார் நோன்பு

இந்த வழிபாட்டில் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன் விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 21 பொருள்களை சமூக அறங்கட்டளைக்கான நிதித் திரட்டலாக அமைப்பின் செயலாலாளர் மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார்.

இதில், 1 கிலோ உப்பு ரூ. 33,000 ரூபாய்க்கு ஏலம்போனது. அடுத்து, மணமாலை 16,000 ரூபாய்க்கும், கற்கண்டு 1 கிலோ 6,000 ரூபாய்க்கும் ஏலம் போனது. இப்படி 21 பொருள்களும் சேர்ந்து, மொத்தம் 2,01,000 ரூபாய்க்கு ஏலம் போயின.

ஏலம் விடும் மேலை பழநியப்பன்
ஏலம் விடும் மேலை பழநியப்பன்

தொடந்து, சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு, பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்தும் நாட்காட்டியும் சிறப்புப் பரிசாக ஜமுக்காளமும் வழங்கப்பட்டன.

மேலை பழநியப்பனிடம் பேசினோம். "நாங்கள் நடத்தும் பிள்ளையார் நோன்பு பெரிய கார்த்திகை என்று கூறப்படும் திருவண்ணாமலை தீபத்தன்று தொடங்கி, சஷ்டியும் சதய நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் கொண்டாட்டத்தோடு நிறைவு செய்யப்படும். இந்த நோன்பில் வைத்து வழிபடும் பொருள்களை ஏலம் விடுவது வழக்கம். ஏனென்றால், இந்த மங்களப் பொருள்களை ஏலம் எடுத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.

மேலை பழநியப்பன்
மேலை பழநியப்பன்

இந்த வருடமும் 2,01,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தப் பணத்தை சமுதாய மக்களின் நலனுக்காகவும் பள்ளி, கல்லூரி படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் செலவு செய்வோம். விடாமல் இந்தப் பிள்ளையார் நோன்பை எங்கள் சந்ததியினரும் தொடர்வார்கள்" என்றார்.