Published:Updated:

முதல் பனி, செம குளிர்... உறைந்தது ஊட்டி...`சில்' படங்கள்!

 உறைபனி
உறைபனி

``வானம் மேகமூட்டம் இன்றி தொடர்ந்து இதே போன்று காணப்பட்டால் உறைபனி தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது" என உள்ளூர் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரியில் வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் நீர் பனிக்காலம் துவங்கும். அதன்பின் நவம்பரில் உறைபனி சீசன் துவங்கி, மார்ச் முதல் வாரம் வரை பனியின் தாக்கம் நீடிக்கும்.

 உறைபனி
உறைபனி

கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மலை மேலிடப் பகுதிகளான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடுமையான உறைபனி நிலவும்.

வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டு, சில நாள்களில் மைனஸுக்கும் இறங்கும். பனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் போன்றவை கருகிக் காணப்படும்.

 உறைபனி
உறைபனி

கடந்த 2019-ம் ஆண்டு அதிக அளவு மழை நாள்களைக் கொண்டிருந்ததால் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனி தள்ளிப்போனது. நவம்பரில் துவங்க வேண்டிய உறைபனி ஜனவரியில் துவங்கியது. இந்த ஆண்டுக்கான முதல் உறைபனி நேற்று (11/11/2020) காணப்பட்டது. இந்த ஆண்டு குறித்த பருவத்தில் துவங்கியுள்ளது.

முதல் நாளான இன்று ஊட்டி, கேத்தி, பாலாடா, கிளன்மார்க்கன், பைக்காரா, சாண்டிநல்லா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புல்வெளிகள் தாவரங்கள் வெண்மை நிறத்தில் பனி படர்ந்து காணப்பட்டன.

 உறைபனி
உறைபனி

அதிகாலை நேரங்களில் கேரட் அறுவடைக்குச் சென்ற தொழிலாளர்கள் குளிரை தாங்க முடியாமல் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டே பணியை மேற்கொண்டனர்.

கேத்தி பகுதியில் கேரட் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களில் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``குளிர் தாங்கவே முடியல. விடிய காலைல வேலைக்கு வந்ததால குளிர் இன்னும் அதிகமா இருக்கு. நெருப்பு போட்டு குளிர சமாளிக்கிறோம். ஸ்வட்டர் போட்டும் குளிர் தாங்க முடியல. கோணிப்பையை போட்டுக்குறோம்" என்றார் நடுங்கியபடியே.

 உறைபனி
உறைபனி

``வானம் மேகமூட்டம் இன்றி தொடர்ந்து இதே போன்று காணப்பட்டால் உறைபனி தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது" என உள்ளூர் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு